தலைமைக் காவலர்

காவல்துறையில் உள்ள பதவி

தலைமைக் காவலர் (Head constable, ஏட்டு, ஏட்டையா என்றும் அழைக்கப்படுகிறார்) என்பது சில பிரித்தானிய மற்றும் பிரித்தானிய குடியேற்ற நாடுகளின் காவல்துறை படைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பதவியாகும். இது இந்திய காவல்துறையில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தொகு

முதலில், தலைமைக் காவலர் (head constable) என்பது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒரு நகர காவல்துறையின் தலைமை அதிகாரியின் சாதாரண பதவிப் பெயராகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இந்த பதவிப் பெயரானது பெரும்பாலான படைகளில் தலைமை காவலர் (chief constable) என்று மாற்றப்பபட்டது. ஒரு சில சிறிய நகரக் காவல்துறைபடைகளும் லிவர்பூல் நகர காவல்துறையும் அதை காவல் சட்டம் 1919 இன் கீழ் இறுதியாக ஒழிக்கும் வரை அதைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. இருப்பினும், வின்செஸ்டர் சிட்டி காவல்துறை 1943 ஆம் ஆண்டு வரை ஹாம்ப்ஷயர் கான்ஸ்டாபுலரியுடன் இணைக்கப்படும் வரை பதவிப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டது போல் தெரிகிறது.

இந்தியா தொகு

 
தலைமைக் காவலர் பதவியில் உள்ள இந்திய காவல்துறை அதிகாரியின் தோள்பட்டை

இந்தியக் காவல்துறையில் உள்ள தலைமைக் காவலர் பதவியானது நாடுகளில் உள்ள காவல் படைகளில் சார்ஜென்ட்டுக்கு இணையானது. தலைமைக் காவலர்கள் தங்கள் சட்டைக் கையில் V வடிவ மூன்று பட்டைகளை அணிவார்கள் அல்லது அவர்களின் தோள்கச்சையில் மூன்று பட்டைகள் அணிந்திருப்பார்கள். [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமைக்_காவலர்&oldid=3595860" இருந்து மீள்விக்கப்பட்டது