காவல் ஆய்வாளர்

காவல் துறை பதவி

ஆய்வாளர் (Inspector) என்பது காவல்துறையில் தகுதி நிலை மற்றும் நிர்வாக பதவி ஆகும். உலகில் இப்பதவியின் பெயர் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், வேறுபட்ட காவல் துறைகளில் இது சமமான பதவி அல்ல.

இந்தியா தொகு

 
ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள இந்திய காவல்துறை அதிகாரியின் சின்னம்

இந்தியாவில் காவல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக இருப்பார். இந்தியாவில் ஒரு காவல்நிலையத்தில், காவலர்கள், தலைமைக் காவலர், ஒரு உதவி ஆய்வாளர் ஒரு ஆய்வாளர் ஆகியோர் இருப்பர். ஆய்வாளரின் நிலையைக் குறிக்கும் விதமாக அவருக்கு மூன்று நட்சத்திர சின்னங்கள் கொடுக்கபட்டிருக்கும். மேலும் அவர் காவல் நிலையத்தின் உயர் கட்டளை அதிகாரியாக இருப்பார். ஆய்வாளர் பதவி துணை ஆய்வாளர் பதவியை விட உயர்ந்ததாகவும், துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை விட குறைந்ததாகவும் இருக்கும். ஆய்வாளர்கள, துணை ஆய்வாளர்கள், உதவி துணை ஆய்வாளர் போன்றோருடன் சேர்ந்தவர்கள், இந்தியாவில் உள்ள மொத்த காவலர்களில் 13% பேர் உள்ளனர். [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_ஆய்வாளர்&oldid=3511354" இருந்து மீள்விக்கப்பட்டது