தாம்பரம்
தாம்பரம் (ஆங்கிலம்: Tambaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது சென்னை புறநகர் பகுதி ஆகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.
தாம்பரம் | |
— மாநகராட்சி — | |
ஆள்கூறு | 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
நகராட்சி தலைவர் | |
சட்டமன்றத் தொகுதி | தாம்பரம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,74,787 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 43 மீட்டர்கள் (141 அடி) |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 43 மீட்டர் (141 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,432 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதி மக்கள் தொகை 1,74,787 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17,535 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,496 மற்றும் 1,611 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80.41%, இசுலாமியர்கள் 6.54%, கிறித்தவர்கள் 12.25%, தமிழ்ச் சமணர்கள் 0%, மற்றும் பிறர் 0.45% ஆகவுள்ளனர்.[3]
நுரையீரல் நோய் மருத்துவமனை
தொகுதாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது. [4][5]
சிறப்புகள்
தொகுசென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை முதலில் மின்சார தொடர்வண்டி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நன்கறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறித்துவ கல்லூரி இங்கு உள்ளது. இந்திய வான்படையின் தளமும் இங்கு உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தாம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ [1]
- ↑ The Story of Tambaram Sanotarium