தாம்பரம் வட்டம்

தாம்பரம் வட்டம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தாம்பரம் நகரம் உள்ளது. இவ்வட்டத்தின் கீழ் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் மற்றும் தாம்பரம் என 3 உள்வட்டங்களும், 20 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]இவ்வட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வருவாய் கிராமங்கள்

தொகு

மக்கள் தொகை

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 383,718 ஆகும். அதில் 194,083 ஆண்களும், 189,635 பெண்களும் உள்ளனர். 98,067 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 7.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 92.03% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 39732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 54,289 மற்றும் 3,523 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.08%, இசுலாமியர்கள் 5.17%, கிறித்தவர்கள் 10.99% மற்றும் பிறர் 0.71% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பரம்_வட்டம்&oldid=3629332" இலிருந்து மீள்விக்கப்பட்டது