சேலையூர், தாம்பரம் வட்டம்
சேலையூர் (Selaiyur) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த 20 வருவாய் கிராமங்களில் ஒன்றாகும்.[1], சேலையூர் தாம்பரம்-வேளச்சேரி சாலையில் அமைந்துள்ளது. இது சென்னை மாநகரத்தின் சுற்றுப் பகுதிகளில் ஒன்றாகும். [2] இதன் அருகமைந்த பகுதிகள் சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மேடவாக்கம் மற்றும் தாம்பரம் ஆகும். அருகமைந்த தொடருந்து நிலையம் தாம்பரம் தொடருந்து நிலையம் ஆகும். சென்னை விமான நிலையம் 9 கிமீ தொலைவில் உள்ளது. கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில்[3] மற்றும் சேலையூர் ஏரி உள்ளது.
சேலையூர் | |
---|---|
குடியிருப்பு | |
ஆள்கூறுகள்: 12°56′N 80°08′E / 12.93°N 80.14°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வருவாய் வட்டம் | தாம்பரம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 20 Revenue Villages of Tambaram Taluk
- ↑ "Selaiyur - the Home of Idols". Archived from the original on 2008-09-18. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
- ↑ Selaiyur - The Ancient Tank