செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு | |
மாவட்டம் | |
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் | |
செங்கல்பட்டு மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | செங்கல்பட்டு |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
மருத்துவர். பொ. விஜயகுமார், இ.கா.ப. |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 8 |
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 4 |
பேரூராட்சிகள் | 6 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 8 |
ஊராட்சிகள் | 359 |
வருவாய் கிராமங்கள் | 636 |
சட்டமன்றத் தொகுதிகள் | 7 |
மக்களவைத் தொகுதிகள் | 3 |
பரப்பளவு | 2944.96 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
25,56,244 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
603 XXX, 600 XXX |
தொலைபேசிக் குறியீடு |
044 |
வாகனப் பதிவு |
TN-19, TN-14, TN-22, TN-85 மற்றும் TN-11 |
இணையதளம் | chengalpattu |
செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.[1] தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[2] இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.
வரலாறு
தொகுசுதந்திர இந்தியாவுக்கு முன்பு செங்கல்பட்டு நகரத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டன.
சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமையகம் மட்டும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் செயல்பட்டது.
1967 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாக நகரமாக காஞ்சிபுரமும், நீதி நகரமாக செங்கல்பட்டும் செயல்பட்டன.
1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் மிக பெரிதாக இருந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்ட புதிய செங்கல்பட்டு மாவட்டத் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[3]
புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகள்
தொகுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.[4][5] இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்கள், 8 வருவாய் வட்டங்கள், 40 குறுவட்டங்கள் மற்றும் 636 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[6]
- தாம்பரம் வருவாய் கோட்டம்
- செங்கல்பட்டு வருவாய் கோட்டம்
- மதுராந்தகம் வருவாய் கோட்டம்
வருவாய் வட்டங்கள்
தொகுஉள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம்
தொகுசெங்கல்பட்டு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. [7] மேலும் இம்மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.[8]
மாநகராட்சி
தொகுநகராட்சிகள்
தொகுபேரூராட்சிகள்
தொகுஊராட்சி ஒன்றியங்கள்
தொகுஅரசியல்
தொகுசட்டமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026) | |||
27 | சோழிங்கநல்லூர் | திரு.எஸ்.அரவிந்தரமேஷ் | (திமுக) |
30 | பல்லாவரம் | திரு.இ.கருணாநிதி | (திமுக) |
31 | தாம்பரம் | திரு.எஸ்.ஆர்.ராஜா | (திமுக) |
32 | செங்கல்பட்டு | திருமதி.வரலஷ்மி | (திமுக) |
33 | திருப்போரூர் | திரு.எஸ்.எஸ்.பாலாஜி | (வி.சி.க) |
34 | செய்யூர் | திரு.பனையூர்.பாபு | (விசிக) |
35 | மதுராந்தகம் | திருமதி.மரகதம்குமரவேல் | (அதிமுக) |
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
தொகு- திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
- மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
- அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்
- திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
- மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்
- மாமல்லபுரம்
- சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
- தட்சிண சித்ரா
- திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
- கடப்பாக்கம் ஆலம்பரை கோட்டை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
- ↑ காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது
- ↑ தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைப்பு
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ செங்கல்பட்டு மாவட்டம் - வருவாய் நிர்வாகம்
- ↑ செங்கல்பட்டு உள்ளாட்சி அமைப்புகள்
- ↑ செங்கல்பட்டு மாவட்டம - வளர்ச்சித்துறை