முதன்மை பட்டியைத் திறக்கவும்

தமிழக மாவட்டங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிருவாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

தமிழக மாவட்டங்கள்
Tamil Nadu district map (Tamil).svg
அமைவிடம்தமிழ்நாடு
எண்ணிக்கை37
மக்கள்தொகை5,65,223 (பெரம்பலூர்) – 46,46,732 (சென்னை)
பரப்புகள்426 கிமீ² (சென்னை) – 6188 கிமீ² (திருவண்ணாமலை)
உட்பிரிவுகள்தாலுக்காக்கள், வருவாய் கிராமங்கள்

மாவட்டங்களை பிரித்தல் 2019தொகு

நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டத்தை பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1] [2] இப்புதிய மாவட்டங்களுக்கு 16 நவம்பர் 2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.[3]

வரலாறுதொகு

 
தமிழக மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம்

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[4]

மாவட்டங்கள் பட்டியல்தொகு

பிரிவு வாரியாக மாவட்டங்களின் பட்டியல்தொகு

மக்கட் தொகைதொகு

தமிழக மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர்[5]. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14 பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71 சதவிகிதத்துடன் தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.

அட்டவணைதொகு

கீழே உள்ள அட்டவணையில் அனைத்து 37 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்படுகிறது.[6]

எண். மாவட்டம் குறியீடு தலைநகரம் நிருவப்பட்டது முந்தைய மாவட்டம் பரப்பளவு (கி.மீ²) மக்கட்தொகை (2011 கணக்கெடுப்பின் படி) மக்கட்தொகை அடர்த்தி (2011 கணக்கெடுப்பின் படி) (கி.மீ²) தாலுகா/வட்டம் வரைபடம்
1. அரியலூர்[7] AR அரியலூர் 23 நவம்பர் 2007 பெரம்பலூர் மாவட்டம் 1,949.31 754,894 [8] 387
 1. அரியலூர் வட்டம்
 2. செந்துறை வட்டம்
 3. உடையார்பாளையம் வட்டம்
 4. ஆண்டிமடம் வட்டம்
 
2. செங்கல்பட்டு CG செங்கல்பட்டு 18 சூலை 2019 காஞ்சிபுரம் மாவட்டம்
3. சென்னை[9] CH சென்னை 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 178.2 4,646,732 [10] 26105
 1. அமைந்தக்கரை வட்டம்
 2. அயனாவரம் வட்டம்
 3. சேத்துப்பட்டு வட்டம்
 4. பெரியமேடு வட்டம்
 5. கிண்டி வட்டம்
 6. மாம்பலம் வட்டம்
 7. மயிலாப்பூர் வட்டம்
 8. பெரம்பூர் வட்டம்
 9. புரசைவாக்கம் வட்டம்
 10. வேளச்சேரி வட்டம்
 
4. கோயம்புத்தூர்[11] CO கோயம்புத்தூர் 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 4,723[12] 3,458,045[13] 732
 1. கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
 2. அன்னூர் வட்டம்
 3. கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
 4. மேட்டுப்பாளையம் வட்டம்
 5. பொள்ளாச்சி வட்டம்
 6. கிணத்துக்கடவு வட்டம்
 7. வால்பாறை வட்டம்
 8. சூலூர் வட்டம்
 9. பேரூர் வட்டம்
 10. மதுக்கரை வட்டம்
 
5. கடலூர்[14] CU கடலூர் 30 செப்டம்பர் 1993 தென்னாற்காடு மாவட்டம் 3,678 2,605,914[15] 709  
6. தருமபுரி[16] DH தருமபுரி 2 அக்டோபர் 1965 சேலம் மாவட்டம் 4,497.77 1,506,843[17] 335  
7. திண்டுக்கல்[18] DI திண்டுக்கல் 15 செப்டம்பர் 1985 மதுரை மாவட்டம் 6,266.64 2,159,775[19] 345  
8. ஈரோடு[20] ER ஈரோடு 31 ஆகத்து 1979 கோயம்புத்தூர் மாவட்டம் 4,723 2,251,744[21] 394  
9. கள்ளக்குறிச்சி KL கள்ளக்குறிச்சி 08 சனவரி 2019 விழுப்புரம் மாவட்டம்
10. காஞ்சிபுரம்[22] KC காஞ்சிபுரம் 1 சூலை 1997 செங்கல்பட்டு மாவட்டம் 4,393 3,998,252[23] 910  
11. கன்னியாகுமரி[24] KK நாகர்கோவில் 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று(கேரளாவிலிருந்து இணைக்கப்பட்டது) 1,672 1,870,374[25] 1119  
12. கரூர்[26] KR கரூர் 30 செப்டம்பர் 1995 திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2,895.57 1,064,493[27] 368  
13. கிருட்டிணகிரி[28] KR கிருட்டிணகிரி 9 பெப்ரவரி 2004 தர்மபுரி மாவட்டம் 5,143 1,879,809[29] 366  
14. மதுரை[30] MA மதுரை 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 3,741.73 3,038,252[31] 812  
15. நாகப்பட்டினம்[32] NG நாகப்பட்டினம் 18 அக்டோபர் 1991 தஞ்சாவூர் மாவட்டம் 2,715.83 1,616,450[33] 595  
16. நாமக்கல்[34] NM நாமக்கல் 1 சனவரி 1997 சேலம் மாவட்டம் 3363 1,726,601[35] 513  
17. நீலகிரி[36] NI உதகமண்டலம் 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 2,452.5 735,394[37] 300  
18. பெரம்பலூர்[38] PE பெரம்பலூர் 30 செப்டம்பர் 1995 திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1,757 565,223[39] 322  
19. புதுக்கோட்டை[40] PU புதுக்கோட்டை 14 சனவரி 1974 திருச்சிராப்பள்ளி மாவட்டம் 4,663 1,618,345[41] 347  
20. இராமநாதபுரம்[42] RA இராமநாதபுரம் 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 4,089.57 1,353,445[43] 331  
21. இராணிப்பேட்டை RN இராணிப்பேட்டை 15 ஆகத்து 2019 வேலூர் மாவட்டம்
22. சேலம்[44] SA சேலம் 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 5,205 3,482,056[45] 669  
23. சிவகங்கை[46] SI சிவகங்கை 15 மார்ச்சு 1985 மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் 4,086 1,339,101[47] 328  
24. தென்காசி TS தென்காசி 18 சூலை 2019 திருநெல்வேலி மாவட்டம்
25. தஞ்சாவூர்[48] TJ தஞ்சாவூர் 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 3,396.57 2,405,890[49] 708  
26. தேனி[51] TH தேனி 25 சூலை 1996 மதுரை மாவட்டம் 3,066 1,245,899[52] 406  
27. தூத்துக்குடி[53]. TK தூத்துக்குடி 20 அக்டோபர் 1986 திருநெல்வேலி மாவட்டம் 4,621 1,750,176[54] 379  
28. திருச்சிராப்பள்ளி[55] TC திருச்சிராப்பள்ளி 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 4,407 2,722,290[56] 618  
29. திருநெல்வேலி[57] TI திருநெல்வேலி 1 நவம்பர் 1956 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று 6,810 3,077,233[58] 452  
30. திருப்பத்தூர் TP திருப்பத்தூர் 15 ஆகத்து 2019 வேலூர் மாவட்டம் 31. திருப்பூர்[59] TP திருப்பூர் 22 பெப்ரவரி 2009 கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் 5,186.34 2,479,052[60] 478  
32. திருவள்ளூர்[61] TL திருவள்ளூர் 1 சூலை 1997 செங்கல்பட்டு மாவட்டம் 3,424 3,728,104[62] 1089  
33. திருவண்ணாமலை[63] TV திருவண்ணாமலை 30 செப்டம்பர் 1989 வட ஆற்காடு மாவட்டம் 6,191 2,464,875[64] 398  
34. திருவாரூர்[65] TR திருவாரூர் 18 அக்டோபர் 1991 தஞ்சாவூர் மாவட்டம் 2,161 1,264,277 [66] 585  
35. வேலூர்[67] VE வேலூர் 30 செப்டம்பர் 1989 வேலூர் மாவட்டம் 6,077 3,936,331 [68] 648  
36. விழுப்புரம்[69] VL விழுப்புரம் 30 செப்டம்பர் 1993 தென்னாற்காடு மாவட்டம் 7,217 3,458,873 [70] 479  
37. விருதுநகர்[71] VR விருதுநகர் 15 மார்ச்சு 1985 மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் 4,288 1,942,288 [72] 453  

சொடுகக்கூடிய வரைப்படம்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
 2. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
 3. செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
 4. தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு!
 5. http://www.census2011.co.in/district.php
 6. "Districts of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்த்த நாள் 24 January 2014.
 7. Ariyalur District
 8. Ariyalur District Census 2011
 9. Chennai District
 10. Chennai District : Census 2011 data
 11. Coimbatore District
 12. "Coimbatore District Statistical Handbook". Coimbatore District Administration. பார்த்த நாள் 21 November 2015.
 13. Coimbatore District Census 2011
 14. Cuddalore District
 15. Cuddalore District Census 2011
 16. Dharmapuri District
 17. Dharmapuri District Census 2011 data
 18. Dindigul District
 19. Dindigul District : Census 2011 data
 20. Erode District
 21. Erode District : Census 2011 data
 22. Kanchipuram District
 23. Kancheepuram District Census 2011 data
 24. கன்னியாகுமரி மாவட்டம்
 25. Kanniyakumari District Census 2011
 26. Karur District
 27. Karur District Census 2011
 28. Krishnagiri District
 29. Krishnagiri District - Census 2011
 30. Madurai District
 31. Madurai District Census 2011
 32. Nagapattinam District
 33. Nagapattinam District Census 2011
 34. Namakkal District
 35. Namakkal District - Census 2011
 36. Nilgiris District
 37. The Nilgiris District - Census 2011
 38. Perambalur District
 39. Perambalur District : Census 2011
 40. Pudukkottai District
 41. Pudukkottai District Census 2011
 42. Ramanathapuram District
 43. Ramanathapuram District Census 2011
 44. Salem District
 45. Salem District Census 2011
 46. Sivaganga District
 47. Sivaganga District Census 2011
 48. Tanjore Distrit
 49. Thanjavur District Census 2011
 50. "Mapp of Thanjavur district". Government of Tamil Nadu (2009). பார்த்த நாள் 24 January 2014.
 51. Theni District
 52. Theni District : Census 2011
 53. தூத்துக்குடி மாவட்டம்
 54. Thoothukkudi District Census 2011
 55. Tiruchirappalli District
 56. Tiruchirappalli District Census 2011
 57. Thirunelveli District
 58. Tirunelveli District Census 2011
 59. Tirupupur District
 60. Tiruppur District Census 2011
 61. Thiruvallur District
 62. Thiruvallur District Census 2011
 63. Tiruvannamalai District
 64. Tiruvannamalai District Census 2011
 65. Tiruvarur District
 66. Thiruvarur District Census 2011
 67. Vellore District
 68. Vellore District : Census 2011
 69. Viluppuram District
 70. Viluppuram District Census 2011
 71. Virudhunagar District
 72. Virudhunagar District Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_மாவட்டங்கள்&oldid=2852064" இருந்து மீள்விக்கப்பட்டது