வத்திராயிருப்பு வட்டம்
வத்திராயிருப்பு வட்டம் (Watrap Taluk) இந்தியாவின், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின், வத்ராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி என 3 உள்வட்டங்களையும், அதனுடன் இணைந்த 22 வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய வத்திராயிருப்பு வருவாய் வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று தமிழக முதல்வரால் நிறுவப்பட்டது.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வத்திராயிருப்பு ஆகும்.
இவ்வட்டத்தின் தற்காலிக வட்டாட்சியர் அலுவலகம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.
வருவாய் வட்ட நிர்வாகம்
தொகுவத்திராயிருப்பு வட்டம் வத்திராயிருப்பு, கோட்டையூர், நத்தம் பட்டி என 3 உள்வட்டங்களைக் கொண்டுள்ளது.
வத்திராயிருப்பு உள்வட்டம்
தொகுவத்திராயிருப்பு உள்வட்டத்தில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், வ. புதுப்பட்டி மற்றும் எஸ். கொடிக்குளம் என 4 வருவாய் கிராமங்கள் உள்ளது.
கோட்டையூர் உள்வட்டம்
தொகுகோட்டையூர் உள்வட்டத்தில் கோட்டையூர், மகாராஜபுரம், தம்பிப்பட்டி, மாரிகலம்காத்தான், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், கோவிந்தநல்லூர், வெல்லப்பொட்டல் மற்றும் அயன்கரிசல்குளம் என 9 வருவாய் கிராமங்கள் உள்ளது.
நத்தம்பட்டி உள்வட்டம்
தொகுநத்தம்பட்டி உள்வட்டத்தில் நத்தப்பட்டி, சுந்தரபாண்டியம், ருத்திரப்பநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, களத்தூர், அம்மாப்பட்டி, மூவரை வென்றான், துலுக்கப்பட்டி, செம்மண்டிகரிசல்குளம் மற்றும் குன்னூர் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Watrap taluk starts administrative functions". The Hindu