உத்தமபாளையம் வட்டம்
உத்தமபாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக உத்தமபாளையம் நகரம் உள்ளது. இவ்வட்டம் கம்பம், சின்னமனூர் மற்றும் கூடலூர் என மூன்று நகராட்சிகள் கொண்டது.
இந்த வட்டத்தின் கீழ் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், மார்க்கையன்கோட்டை, எரசக்கநாயக்கனூர் என 6 உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:
1.க.புதுப்பட்டி
4.கம்பம்
10.கருகட்டான் குளம்,சின்னமனூர்
16.குச்சனூர்
25.பண்ணைப்புரம்
27.பொட்டிபுரம்
30. சங்கராபுரம்
34.தேவாரம் மலை
38.வேப்பம்பட்டி
39. அழகாபுரி
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 1,18,381 வீடுகளும், 4,35,069 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 2,17,142 ஆண்களும், 2,17,927 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 39512 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 72,449 மற்றும் 300 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.3%, இசுலாமியர்கள் 7.02%, கிறித்தவர்கள் 5.4%% & பிறர் 0.27% ஆகவுள்ளனர். [2]