உத்தமபாளையம்
உத்தமபாளையம் (ஆங்கிலம்:Uthamapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தேனி - கம்பம் சாலையில் உள்ளது. உத்தமபாளையம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,508 வீடுகளும், 29,050 மக்கள்தொகையும் கொண்டது. [1]
இது 9 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 121 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
பொருளாதாரம்
தொகுகம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உத்தமபாளையம் பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது.
கோயில்
தொகுஇந்த ஊரில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் காளாத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
கல்லூரிகள்
தொகு- ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி.இந்த கல்லூரியில் கவியரசு நா.காமராசன் பேராசிரியர் ஆக பணி புரிந்தார் என்பது கூடுதல் சிறப்பு மேலும் இந்த கல்லூரியில் தான் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் பயின்றார்
- தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வியில் கல்லூரி
சிறப்புக்கள்
தொகு- சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி. டி. ராஜன் வாழ்ந்த இல்லம் இங்குள்ளது. பி. டி. ராஜனின் மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராசன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் , அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பி. டி. ஆர். பழனிவேல்ராசன் அவர்களின் புதல்வர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் தமிழ்நாட்டு அரசியலின் ஒரு முக்கிய பிரமுகராகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்கள்
தொகு