தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார். தமிழ்நாடு 1950 வரை சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, 1950 முதல் 69 வரை சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது. இப்பட்டியலில் 1920 முதல் தற்காலம் வரை, சென்னை சட்டமன்றத்தின் (இரு அவைகள்) தலைவர்களின் பெயர், கட்சி, பதவி காலம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் இந்தியாவில் அவைத்தலைவர்கள்
தொகுபிரித்தானிய இந்தியப் பேரரசின் ஒரு அங்கமாகிய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 1920–37 இல் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. அம்முறையில் ஓரங்க (unicameral) சட்டமன்றம் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவர்கள் பிரசிடன்ட் என்று அழைக்கப்பட்டனர். 1937 இல் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப் பட்டது. அம்முறையில் சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன – கவுன்சில் என்றழைக்கப் பட்ட மேலவையின் தலைவர் சேர்மன் எனவும், அசம்பிளி என்றழைக்கப் பட்ட கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் எனவும் வழங்கப்பட்டனர்.[1][2][3][4][5]
இரட்டை ஆட்சிமுறையில் அவைத் தலைவர்கள்
தொகு(பிரசிடென்ட், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்)
# | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி |
1 | பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி | 1920 | பிப்ரவரி 1925 | கட்சி சார்பற்றவர் |
2 | எல். டி. சாமிகண்ணு பிள்ளை | பிப்ரவரி 1925 | செப்டம்பர் 1925 | நீதிக்கட்சி |
3 | மரியதாஸ் ருத்தினசாமி | செப்டம்பர் 1925 | 1926 | நீதிக்கட்சி |
4 | சி. வி. எஸ். நரசிம்ம ராஜூ | 1926 | 1930 | சுயாட்சி கட்சி |
5 | பி. ராமச்சந்திர ரெட்டி | 1930 | 1937 | நீதிக்கட்சி |
மாநில சுயாட்சி முறையில் அவைத் தலைவர்கள்
தொகுமேலவை
தொகு(சேர்மன், சென்னை மாகாண சட்டமன்ற மேலவை)
# | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி |
1 | யு. ராமா ராவ் | 1937 | 1945 | காங்கிரசு |
2 | ஆர். பி. ராமகிருஷ்ண ராஜூ | 1946 | 1952 | காங்கிரசு |
கீழவை
தொகு(ஸ்பீக்கர், சென்னை மாகாண சட்டமன்ற கீழவை)
# | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி |
1 | புலூசு சம்பாமூர்த்தி | 1937 | 1942 | இந்திய தேசிய காங்கிரசு (காங்கிரசு) |
தேர்தல் நடைபெற வில்லை | 1942 | 1946 | ||
2 | ஜெ சிவசண்முகம் பிள்ளை | 1946 | 1952 | காங்கிரசு |
இந்தியக் குடியரசில் அவைத் தலைவர்கள்
தொகு1950 ஜனவரி 26, ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. புதிய அரசியல் சட்ட அமைப்பின் படி, மாநில சட்டமன்றங்கள் ஈரங்க (bicameral) அவைகளாக இருந்தன. மேலவை Legislative Council என்றும், கீழவை Legislative Assembly என்றும் வழங்கப் பட்டன. மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். 1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற அவைகளும், தமிழ் நாடு சட்டமன்ற கீழவை/மேலவை என்று வழங்கப்பட்டன. மேலவை 1986 இல் நீக்கப்பட்டது.[6][7][8][9][10][11][12][13]
மேலவை
தொகு(சேர்மன், சென்னை மாநிலம் / தமிழ் நாடு சட்டமன்ற மேலவை)
# | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி |
1 | டாக்டர் பி. வி. செரியன் | 1952 | 20 ஏப்ரல் 1964 | காங்கிரசு |
2 | எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் | 1964 | 1970 | காங்கிரசு |
3 | பி. சிற்றரசு கார்த்திகேயன் | 1970 | 1976 | திமுக |
4 | ம. பொ. சிவஞானம் | 1976 | 1986 | தமிழரசுக் கழகம் |
கீழவை
தொகு(ஸ்பீக்கர், சென்னை மாநிலம் / தமிழ் நாடு சட்டமன்ற மேலவை)
# | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி | துணைத் தலைவர் |
1 | ஜெ சிவசண்முகம் பிள்ளை | 06 மே 1952 | 16 ஆக்ஸ்ட் -1955 | காங்கிரசு | பி. பக்தவக்சல நாயுடு |
2 | என். கோபால மேனன் | 27 செப்டம்பர் 1955 | 01 நவம்பர் 1956 | காங்கிரசு | பி. பக்தவக்சல நாயுடு |
3 | யு. கிருஷ்ணா ராவ் | 30 ஏப்ரல் 1957 | 03 ஆகஸ்ட் 1961 | காங்கிரசு | பி. பக்தவக்சல நாயுடு |
4 | எஸ். செல்லபாண்டியன் | 31 மார்ச் 1962 | 14 மார்ச் 1967 | காங்கிரசு | கே. பார்த்தசாரதி |
5 | சி. பா. ஆதித்தன் | 17 மார்ச் 1967 | 12 ஆகஸ்ட் 1968 | திமுக | புலவர் கே. கோவிந்தன் |
6 | புலவர் கே. கோவிந்தன் | 22 பிப்ரவரி 1969 | 14 மார்ச் 1971 | திமுக | ஜி. ஆர். எட்மண்டு |
7 | கே. ஏ. மதியழகன் | 24 மார்ச் 1971 | 02 டிசம்பர் 1972 | திமுக | பெ. சீனிவாசன் |
8 | பெ. சீனிவாசன் (தற்காலிகத் தலைவர்) | 02 டிசம்பர் 1972 | 03 ஆகஸ்ட் 1973 | திமுக | |
9 | புலவர் கே. கோவிந்தன் | 03 ஆகஸ்ட் 1973 | 03 ஜூலை 1977 | திமுக | என். கணபதி |
10 | முனு ஆதி | 06 ஜூலை 1977 | 18 ஜூன் 1980 | அதிமுக | சு. திருநாவுக்கரசர் |
11 | க. இராசாராம் | 21 ஜூன் 1980 | 24 பிப்ரவரி 1985 | அதிமுக | பி. எச். பாண்டியன் |
12 | பி. எச். பாண்டியன் | 27 பிப்ரவரி 1985 | 05 பிப்ரவரி 1989 | அதிமுக | வி. பி. பாலசுப்ரமணியன் |
13 | மு. தமிழ்க்குடிமகன் | 08 பிப்ரவரி 1989 | 30 ஜூன் 1991 | திமுக | வி. பி. துரைசாமி |
14 | சேடப்பட்டி முத்தையா | 03 ஜூலை 1991 | 21 மே 1996 | அதிமுக | கே. பொன்னுசாமி, கே. காந்திராஜன் |
15 | பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் | 23 மே 1996 | 21 மே 2001 | திமுக | பரிதி இளம்வழுதி |
16 | கா. காளிமுத்து | 24 மே 2001 | 01 பிப்ரவரி 2006 | அதிமுக | அ. அருணாசலம் |
17 | ஆர். ஆவுடையப்பன் | 19 மே 2006 | 15 மே 2011 | திமுக | வி. பி. துரைசாமி |
18 | டி. ஜெயக்குமார் | 27 மே 2011 | 29 செப்டம்பர் 2012 | அதிமுக | பி. தனபால் |
19 | பி. தனபால் | 10 அக்டோபர் 2012 | அதிமுக | வி. ஜெயராமன் | |
20 | பி. தனபால் | 11 மே 2021 | அதிமுக | வி. ஜெயராமன் | |
21 | எம். அப்பாவு | 12 மே 2021 | திமுக | கு. பிச்சாண்டி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Johari, J. C. THE CONSTITUTION OF INDIA A Politico-Legal Study. Sterling Publishers Pvt. Ltd. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-207-2654-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-2654-3.
- ↑ Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916–37. Poompozhil Publishers. pp. 212–220.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Legislative Council to be revived: Karunanidhi". The Hindu. 7 April 2010. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010.
- ↑ Naidu, R. Janardhanam. Bharani's Madras handbook.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "List of Governors of Madras, Provinces of British India". Worldstatesman. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010.
- ↑ World Statesmen.org — Indian states since 1947
- ↑ "Government of Tamil Nadu — The State Legislature — Origin and Evolution". Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2010-08-07.
- ↑ "dated September 28, 1955: Madras Assembly Speaker". தி இந்து. September 28, 2005 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 12, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110912094242/http://www.hindu.com/2005/09/28/stories/2005092800270902.htm.
- ↑ "dated May 1, 1957 : New Speaker of Madras". The Hindu. May 1, 2007 இம் மூலத்தில் இருந்து மே 2, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070502093234/http://www.hindu.com/2007/05/01/stories/2007050100021200.htm.
- ↑ "Statistical report on General Election 1962 to the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India.
- ↑ "Statistical report on General Election 1967 to the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India.
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-08-07.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Kaliyaperumal, M (1992). The office of the speaker in Tamilnadu : A study. சென்னை பல்கலைக்கழகம்.
{{cite book}}
: External link in
(help)|title=