ஜெ. சிவசண்முகம் பிள்ளை

ஜெகநாதன் சிவசண்முகம் (J. Shivashanmugam Pillai)(24 பிப்ரவரி 1901-17 பிப்ரவரி 1975) இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1938ஆம் ஆண்டில், சென்னை மாநகர முதல் பட்டியல் சாதி மாநகரத் தந்தை ஆவார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராகவும் பணியாற்றினார்.

ஜெ. சிவசண்முகம்
பிறப்பு24 பிப்ரவரி 1901
சென்னை, தமிழ்நாடு
இறப்பு17 பெப்ரவரி 1975(1975-02-17) (அகவை 73)
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
சந்திரா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சிவசண்முகம் சென்னையில் பிப்ரவரி 24, 1901 அன்று பிறந்தார். இவரது தந்தை ஜெகநாதன் மேலாளராக இருந்தார்.[1] சென்னையில் பள்ளிப்படிப்பு முடித்த பின் இலயோலாக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனியாக முதுகலை முடித்தார்.[1]

சுதந்திர இந்தியாவில் முதல் சபாநாயகர்

தொகு

மாநில சட்டமன்றங்களுக்கான முதல் தேர்தல்கள் 1951இல் நடத்தப்பட்டன. சுதந்திரம் பெற்றதிலிருந்து, அனைத்து இந்திய குடிமக்களையும் சேர்க்க உரிமையை விரிவுபடுத்தியது. சிவசண்முகம் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முதல் சபாநாயகராக வெற்றிகரமாகப் பரிந்துரைக்கப்பட்டார். சிவசண்முகம் 1951 முதல் 1955 வரை சட்டமன்ற சபாநாயகராக பணியாற்றினார்.[2][3]

பிற்கால வாழ்வு

தொகு

1955 முதல் 1961 வரை சிவசண்முகம் ஒன்றிய பொதுச் சேவை ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றினார்.[1] 1962ஆம் ஆண்டில், இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்டு, 1962 முதல் 1968 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.[1][4]

குடும்பம்

தொகு

சிவசண்முகம் 1937இல் சந்திராவை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1][4]

இறப்பு

தொகு

சிவசண்முகம் 17 பிப்ரவரி 1975இல் தனது 73 வயதில் வயது முதிர்வு காரணமாக இறந்தார்.[4]

படைப்புகள்

தொகு
  • History of the Adi Dravidas.
  • Rajah (1930). The Life, Select Writings and Speeches of Rao Bahadur M. C. Rajah. Indian Publishing House.
  • Legislative Protection of Cultivating Tenant Labourers.
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1937-1938
பின்னர்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Rāmacandra Kshīrasāgara (1994). Dalit movement in India and its leaders, 1857-1956. M.D. Publications Pvt. Ltd. pp. 294–295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185880433, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85880-43-3.
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India. Archived from the original on 9 April 2009. பார்க்கப்பட்ட நாள் 3 April 2009.
  3. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 6 October 2014.
  4. 4.0 4.1 4.2 Biographical Sketch - Rajya Sabha. Government of India. Archived from the original on 29 மார்ச்சு 2008. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2021. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._சிவசண்முகம்_பிள்ளை&oldid=3943677" இலிருந்து மீள்விக்கப்பட்டது