கே. வெங்கடசாமி நாயுடு

கே. வெங்கடசாமி நாயுடு (K. Venkataswami Naidu) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1930களின் இறுதியில் சென்னை நகரின் மேயராகப் பணியாற்றியவர். 1952-54 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தின் அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சராக சி. ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் பணியாற்றினார்.[1][2][3]

இளமை

தொகு

6 ஜூலை 1896 அன்று பாஷ்யம் நாயுடுவுக்கு (அப்பா & கோ பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனர்) பிறந்த வெங்கடசுவாமி நாயுடு, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரபலமான வணிகரும் மொழிபெயர்ப்பளருமான பேரி திம்மப்பாவின் நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவர். வெங்கடசுவாமி நாயுடு, சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்றார். மேலும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். அவர்களின் குடும்பம் ஒரு சக்திவாய்ந்த நாயுடு குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும், சென்னையில் செல்வந்தர்கள் குடும்பங்களில் ஒன்றாகும். 1916இல் வெங்கடசுவாமி நாயுடு வரலட்சுமி பீமம்மாள் என்பவரை மணந்தார்.

முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1938-1939
பின்னர்

மேற்கோள்கள்

தொகு
  1. Justice Party Golden Jubilee Souvenir, 1968. pp. 50–70.
  2. The Madras Tercentenary commemoration volume. Madras Tercentenary Celebration Committee. p. 116.
  3. எஸ். சத்தியமூர்த்தி, K. V. Ramanathan (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 2. Pearson Education India. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1684-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வெங்கடசாமி_நாயுடு&oldid=4116543" இலிருந்து மீள்விக்கப்பட்டது