பேரி திம்மப்பா

இந்திய தூபாஷ்

பேரி திம்மப்பா / திம்மண்ணா என்வர் ஒரு துபாஷ் (மொழிப்பெயர்ப்பாளர்) ஆவார். இவர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகவர்களான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோருக்கு தலைமை பேச்சுவார்த்தையாளராக இருந்தார். இவர் நாயக்க சகோதரர்களிடமிருந்து மதராசை வாங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பேரி திம்மப்பா 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆந்திராவின் மச்சிலிபட்னத்திற்கு அருகிலுள்ள பாலகொல்லுவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். [1] புதிதாக கட்டப்பட்ட மதராஸ் கோட்டையின் மதில்களுக்கு வெளியே ஒரு கருப்பர் நகரத்தை நிறுவினார், பின்னர் அது புனித ஜார்ஜ் கோட்டையாக மாறியது. [2]

இவரது குடும்பதினர் பல தசாப்தங்களாக கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை வணிகர்களாக இருந்தனர். திம்மப்பாவின் சகோதரர் பேரி வெங்கடாத்ரிக்கு சொந்தமான கிண்டி லாட்ஜ் இருந்தது. இது தற்போதய தமிழ்நாடு ராஜ் பவன் ஆகும். இவர் மதராஸ் மாநிலத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஆவார். [3]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_திம்மப்பா&oldid=3305912" இலிருந்து மீள்விக்கப்பட்டது