பிரான்சிஸ் டே
சர் பிரான்சிஸ் டே (Francis Day, 1605–1673) அவர்களின் முயற்சியால் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதல் கோட்டையான புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் உருவானது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும் இங்குள்ள கோட்டை சர் பிரான்சிஸ்டே மற்றும்அவரது சக பணியாளரான ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராஸ்என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னையில்
கட்டப்பட்டது. இப் பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி
தொகு1600 டிசம்பர் 31 ஆம் நாள் வணிகம் செய்வதற்கு பிரிட்டனில் அனுமதி பெற்றனர். சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கினர். இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மலாக்காவிற்கு அருகில் துறைமுகத்தினை உருவாக்கினர். [1]
சென்னப்பட்டினம்
தொகுமேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் சென்னப்ப நாயக்கரிடம் விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23இல் கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
ஜார்ஜ் டவுன்
தொகுஇக்கோட்டை வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்த உதவியது. கர்நாடகம் என்பது கிழக்குக் கடற்கரைச் சாலையும் அதை ஒட்டியுள்ள பின்புற நிலப்பகுதியும் ஆகும்.ஆர்காடு ஸ்ரீரங்கப்பட்டினம் மற்றும் ஆர்க்காடு அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் புனித ஜார்ஜ் கோட்டை உதவியது. ஆறு மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை அக்காலத்தில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.[2]
கோட்டை அமைப்பு
தொகு1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தற்போதைய தலைமைச் செயலகம் , அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன. புனித மேரி கிறித்துவ ஆலயம், கிளைவ் மாளிகை, கோட்டை அருங்காட்சியகம்
ஆகியன உள்ளன.[3]
கறுப்பர் நகரம்
தொகுபுதிதாகக் குடியேறிய காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது.[4] புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டு விரைவாக வளரத் தொடங்கியது. முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த சென்னக் கேசவப் பெருமாள் மற்றும் சென்ன மல்லிசுவரசுவாமி கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் தங்கச்சாலைக்காக இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே பட்டணம் கோவில் என புகழ்பெற்றிருந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Pofile - CHENNAI", www.chennai.tn.nic.in, archived from the original on 2016-01-14, பார்க்கப்பட்ட நாள் 2018-05-30
- ↑ "Day, Francis (1829–1889), military surgeon and ichthyologist | Oxford Dictionary of National Biography", The Oxford Dictionary of National Biography (in ஆங்கிலம்), Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/7363, பார்க்கப்பட்ட நாள் 2018-05-30
- ↑ "Seminar Recommendations", Priorities and Planning for the Provision of Books, Commonwealth Secretariat: 1–6, 1973-01-01, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781848592025
- ↑ Food in the West / Western Governors' Conference., s.n., 1982
{{citation}}
: CS1 maint: extra punctuation (link)