சேடபட்டி இரா. முத்தையா
(சேடப்பட்டி முத்தையா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேடபட்டி இரா. முத்தையா தி.மு.கவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.[1][2]. 2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாச்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
சேடபட்டி இரா. முத்தையா | |
---|---|
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் | |
பதவியில் 1991–1996 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 3, 1945. முத்தப்பன்பட்டி, தே. கல்லுப்பட்டி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சகுந்தலா |
தொழில் | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
குறிப்புகள்தொகு
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu.
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற அ. தி. மு. க. உறுப்பினர்கள்