பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி

திவான் பகதூர் பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி (Sir Perungavur Rajagopalachari, மார்ச் 18, 1862டிசம்பர் 1, 1927) ஒரு இந்திய நிருவாகி மற்றும் அதிகாரி. கொச்சின் மற்றும் திருவிதாங்கூர் அரசுகளின் திவானாகப் பணியாற்றியவர். சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் முதல் இந்தியத் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சென்னை நகரில் பிறந்த ராஜகோபாலாச்சாரி சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். மே 3, 1886 இல் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். டிசம்பர் 1887 இல் உதவி ஆட்சியாளராகப் பணி உயர்வு பெற்றார். மே 2, 1890-டிசம்பர் 1896 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் துணை ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார்.

கொச்சின் திவான் தொகு

டிசம்பர் 1896ல் கொச்சின் அரசின் மன்னர் ராம வர்மாவால் திவானாக நியமிக்கப்படார். 1901 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் தான் கொச்சின் உள்ளூர் வர்த்தகர்கள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கமாக மாறியது. மேலும் இவரது ஆட்சிக் காலத்தில் கொச்சின் அரசின் ஆவண மைய அலுவலகமும் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் கேரள் அரசின் ஆவணத் துறையாக மாறியது.[1][2] This later evolved into the Kerala State Archives Department.[2]

திருவிதாங்கூர் திவான் தொகு

ராஜகோபாலாச்சாரி 1901 முதல் சென்னை மாகாணத்தின் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பதிவாளராகவும், 1902-06 காலகட்டத்தில் மீண்டும் துணை ஆட்சியாளராகவும் பணியாற்றினார். 1906ம் ஆணு திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த அய்யன்காளி நடத்திய பட்டியல் வகுப்பினர் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார். 1907ம் ஆண்டு பட்டியல் வகுப்பினர் குழந்தைகளை பள்ளிகளில் அனுமதிக்கும் படி திருவிதாங்கூர் அரசு ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்த நம்பூதிரி நாயர் சாதி மக்கள் அரசாணையை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக பட்டியர் சாதியினர் அவர்களது விளைநிலங்களில் வேலை செய்ய மறுத்தனர். 1910ம் ஆண்டு ராஜாகோபாலாச்சாரி மற்றும் கல்வித் துறையை நிருவகித்துக் கொண்டிருந்த மிட்செல் என்னும் ஆங்கிலேயரும் தலையிட்டு இவ்வாணையை நடைமுறைப்படுத்தினர். இது தவிர பட்டியல் சாதியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப் பட்டிருந்த திருவிதாங்கூர் சட்ட்மன்றத்திற்கு அவர்களை அனுமதிக்க ராஜாகோபாலாச்சாரி ஆணையிட்டார். இதன்படி அய்யன்காளி திருவிதாங்கூர் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பட்டியல் வகுப்பினர் ஆவார். அவர் தனது ஆட்சி காலத்தில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டார் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.[3][4][5][6]

பிற்கால வாழ்க்கை தொகு

1914ம் ஆண்டு ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண நீதித்துறையின் முதல் இந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1917ம் ஆண்டு சென்னை ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் இந்தியத் தலைவராக டிசம்பர் 17, 1920ம் ஆண்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923ல் பனகர் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. 1923 இல் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தபின் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சட்டமன்றத் தலைவரானார். இராஜகோபாலாச்சாரி லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றியபின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா திரும்பினார். 1927ல் மரணமடைந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "History of the Indian Chamber of Commerce and Industry - Cochin". iccicochin.com. Archived from the original on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2008-07-12.
  2. 2.0 2.1 "Missing chapter in history of universal schooling". Archive Files to enter hard disk. July 23, 2003 இம் மூலத்தில் இருந்து 2008-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080828121225/http://www.my-kerala.com/n/a/2003/7/. பார்த்த நாள்: 2008-07-12. 
  3. M.A.Shakoor. "VAKKOM MAULAVI - THE MAN WHO LED ISLAMIC RENAISSANCE IN KERALA A TRAIL BLAZER IN POLITICAL JOURNALISM". Vakkom Moulavi Foundation Trust. Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2008-07-12.
  4. Proserpio, Leo (1931). L.D. Swamikannu Pillai: A Biographical Study. Codialbail Press. பக். 96. 
  5. Ralhan, O. P. (2002). Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT LTD. பக். 185. ISBN 8174888659 இம் மூலத்தில் இருந்து 2012-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121019043142/http://books.google.co.in/books?id=P4lCjG1DUV4C&pg=PA185&lr=&sig=ACfU3U3KOtL7bIwxXsTCd4Bvnw34kmL0Ww. பார்த்த நாள்: 2011-07-02. 
  6. Natesan, G. A. (1925). The Indian Review. G. A. Natesan & Co.. பக். 649. 

மேற்கோள்கள் தொகு