திசம்பர் 1
நாள்
(டிசம்பர் 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 1 (December 1) கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 800 – வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.
- 1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
- 1768 – அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.
- 1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார்.
- 1828 – அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான்.
- 1834 – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது.
- 1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்புரையைப் படித்தார்.[1]
- 1913 – தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.
- 1913 – முதலாவது பால்கான் போரை அடுத்து துருக்கியிடம் இருந்து சுயாட்சி உரிமை பெற்ற பெற்ற கிரீட் கிரேக்கத்துடன் இணைந்தது.
- 1918 – திரான்சில்வேனியா உருமேனியாவுடன் இணைந்தது.
- 1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
- 1918 – சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
- 1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- 1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். யோசப் ஸ்டாலின் இந்நிகழ்வைப் பயன்படுத்தி பெரும் துப்புரவாக்கத்தை ஆரம்பித்தார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசர் இறோகித்தோ அமெரிக்காவுடனான போரை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்தார்.
- 1958 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரெஞ்சு ஒன்றியத்தினுள் சுயாட்சி பெற்றது.
- 1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.
- 1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- 1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
- 1961 – இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
- 1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
- 1971 – கெமர் ரூச் போராளிகள் கம்போடிய அரசு நிலைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
- 1973 – பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
- 1974 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் போயிங் 727 வானூர்தி வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
- 1974 – ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வடமேற்கே போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
- 1981 – யுகோசுலாவியாவின் வானூர்தி ஒன்று கோர்சிகாவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் உயிரிழந்தனர்.
- 1988 – உலக எயிட்சு நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது.
- 1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
- 1989 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
- 1991 – பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
- 1997 – இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ரன்வீர் சேனா அமைப்பினர் கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்குள்ள இலக்சுமன்பூர்-பதி என்ற ஊரைத் தாக்கி 63 தலித்துகளைக் கொன்றனர்.
- 2006 – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
பிறப்புகள்
- 1895 – காகா காலேல்கர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1981)
- 1900 – சாமி சிதம்பரனார், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (இ. 1961)
- 1901 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (இ. 1960)
- 1918 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (இ. 2001)
- 1935 – வுடி ஆலன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1949 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (இ. 1993)
- 1949 – செபஸ்டியான் பினேரா, சிலியின் 35வது அரசுத்தலைவர்
- 1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்
- 1955 – உதித் நாராயண், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- 1963 – அர்ஜுன றணதுங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர், அரசியல்வாதி
இறப்புகள்
- 1825 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1777)
- 1859 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (பி. 1790)
- 1866 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய புவியியலாளர் (பி. 1790)
- 1916 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (பி. 1858)
- 1927 – பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி, இந்திய நிருவாகி (பி. 1862)
- 1947 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1877)
- 1964 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (பி. 1892)
- 1973 – டேவிட் பென்-குரியன், இசுரேலின் 1வது பிரதமர் (பி. 1886)
- 1974 – சுசேதா கிருபளானி, உத்தரப் பிரதேச முதலமைச்சர்.(பி. 1908)
- 1980 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (பி. 1896)
- 1990 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (பி. 1900)
- 2001 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1909)
- 2012 – தேவேந்திரலால், இந்திய புவியியற்பியலாளர் (பி. 1929)
- 2015 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
- 2016 – இன்குலாப், தமிழகக் கவிஞர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1944)
சிறப்பு நாள்
- குடியரசு நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
- விடுதலை நாள் (போர்த்துக்கல்)
- ஆசிரியர் நாள் (பனாமா)
- உலக எயிட்சு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 37