1768
1768 (MDCCLXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1768 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1768 MDCCLXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1799 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2521 |
அர்மீனிய நாட்காட்டி | 1217 ԹՎ ՌՄԺԷ |
சீன நாட்காட்டி | 4464-4465 |
எபிரேய நாட்காட்டி | 5527-5528 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1823-1824 1690-1691 4869-4870 |
இரானிய நாட்காட்டி | 1146-1147 |
இசுலாமிய நாட்காட்டி | 1181 – 1182 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 5 (明和5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2018 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4101 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 9 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.
- மே 10 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
- ஆகஸ்ட் 8 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது நாடுகாண் பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தார்.
- டிசம்பர் 1 - அடிமைகளை ஏற்றிச் சென்ற பிரெடென்ஸ்போர்க் என்ற கப்பல் நோர்வேயில் மூழ்கியது.
- டிசம்பர் 6 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் முதல் பிரதி வெளிவந்தது.
- டிசம்பர் 21 - நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- கூர்க்காக்கள் நேபாளத்தைக் கைப்பற்றினர்.
பிறப்புக்கள்
தொகு- மார்ச் 21 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1830)