நவம்பர் 7
நாள்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 7 (November 7) கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
- 1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.
- 1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.
- 1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.
- 1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.
- 1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.[1]
- 1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
- 1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.
- 1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
- 1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.
- 1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
- 1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
- 1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
- 1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1956 – சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.
- 1956 – அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- 1975 – வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.
- 1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.
- 1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.
- 1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.
- 2000 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.
- 2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
- 2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241)
- 1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)
- 1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)
- 1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)
- 1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)
- 1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)
- 1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)
- 1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)
- 1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)
- 1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)
- 1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்
- 1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)
- 1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்
- 1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்
- 1939 – பார்பாரா இலிசுகோவ், அமெரிக்கக் கணினி அறிவியலாளர்
- 1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி
- 1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி
- 1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
- 1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்
- 1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்
- 1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
- 1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- 1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை
இறப்புகள்
- 644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)
- 1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)
- 1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)
- 1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)
- 1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823)
- 1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)
- 1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை
- 1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)
- 1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)
- 1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885)
- 1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).
- 2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)
- 2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)
- 2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)
- 2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
- அக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)
மேற்கோள்கள்
- ↑ "Street Car Plunge 46 Drowned". Boston Globe. 29-10-2016. பார்க்கப்பட்ட நாள் 17-11-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 7 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்