ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி
கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy, 1783 – நவம்பர் 7, 1836[1][2]) பிரித்தானிய இலங்கையில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1835 மே 30 முதல் முதல் 1836 வரை முதலாவது சட்டவாக்கப் பேரவையில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்.[3]
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி | |
---|---|
1வது இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் மே 30, 1835 – 1836 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | சைமன் காசிச்செட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆறுமுகத்தாபிள்ளை குமாரசுவாமி 1783 கெருடாவில், பிரித்தானிய இலங்கை |
இறப்பு | நவம்பர் 7, 1783 (அகவை 53) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
துணைவர் | விசாலாட்சி வைரவநாதன் (2வது) |
பிள்ளைகள் | சேர் முத்து குமாரசுவாமி (முதல் மனைவிக்கு) செல்லாச்சி அருணாசலம் (2ம் மனைவிக்கு) |
வேலை | மொழிபெயர்ப்பாளர், அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகுமாரசுவாமி 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில்[4] ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[5]
குமாரசுவாமி விசாலாட்சி என்பாரைத் திருமணம் புரிந்தார்.[5] இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்.[5][6][7].
ஆறுமுகம் குமாரசுவாமி பிரித்தானிய ஆளுநர் பிரடெரிக் நோர்த் ஆரம்பித்து வைத்த மதப்பள்ளியில் பயின்று வெளியேறி 1805 ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். ஆளுனரினால் இவர் தனது 26வது அகவையில் முதலியார் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராசசிங்கன் பிரித்தானியரால கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்தார். இவரது பணிகளுக்காக 1819 ஆம் ஆண்டில் ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் இவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.[8]
சட்டசபை உறுப்பினர்
தொகுஇவர் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட்-ஹோர்ட்டனின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் சட்டவாக்கப் பேரவைக்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக இவரைக் கட்டாயமாக இளைப்பாறச் செய்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராக்கினார்.[9]. இவருடன் முதலியார் டி. ஜே. பிலிப்சு என்பவர் சிங்களவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Muttucumaraswamy, V. (1992). Some Eminent Tamils. Department of Hindu Religious and Cultural Affairs, Sri Lanka. p. 1.
- ↑ இறந்த தேதி மே 14, 1937 என க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை நூலில் தந்திருக்கிறார்.
- ↑ He won the admiration, affection of all Sunday Times - February 1, 1998
- ↑ Vythilingam, M. (1971). The Life of Sir Ponnambalam Ramanathan 1. pp. 37–48.
- ↑ 5.0 5.1 5.2 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). pp. 40–41.
- ↑ "He won the admiration, affection of all". சண்டே டைம்சு. 1 பிப்ரவரி 1998. http://sundaytimes.lk/980201/plus10.html.
- ↑ NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017
- ↑ Vythilingam, M. (1971). The life of Sir Ponnambalam Ramanathan. Vol. 1. Ramanathan Commemoration Society. pp. 36–43.
- ↑ குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008