எர்னஸ்ட் முத்துசாமி
எர்னஸ்ட் முத்துசாமி (பிறப்பு:நவம்பர் 7, 1941), பிரெஞ்சு அரசின் நிர்வாகத்திலுள்ள குவாதலூப்பேயில் பிறந்தார். இவர் ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி.[1]
எர்னஸ்ட் முத்துசாமி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 7 1941 |
வாழிடம் | குவாதலூப்பே |
உடைமைத்திரட்டு | பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் 1981-2002 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் பிறப்பால் தமிழராவார். இவரது முன்னோர் தமிழ்நாட்டில் இருந்து குவாதலூப்பே பகுதிக்கு கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள்.[1] இலக்கிய ஆசிரியராகத் தொழிலை மேற்கொண்ட இவர், பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு, 1986 மற்றுன் 1988 ஆகிய ஆண்டுகளில் பிராந்திய தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1989 முதல் 2008 வரை செயிண்ட் பிரான்சிசின் மேயராகவும் குவாதலூப்பேயின் பிராந்திய கவுன்சிலின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். பிறகு, பிரெஞ்சு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.[1] இவர் 1979 முதல் 2006ஆம் ஆண்டு வரை அரசியல் சார்ந்த கட்டுரைகளையும், புதினங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளார்.