தோர்ப்சான் சிக்கிலேண்டு

தோர்ப்சான் சிக்கிலேண்டு (Torbjørn Sikkeland) (3 ஆகத்து 1923 முதல் – 7 நவம்பர் 2014)[1] என்பவர் நார்வே நாட்டு வேதியியலாளரும், உட்கரு இயற்பியலாளரும், கதிர்வீச்சு உயிரியற்பியலாளரும் ஆவார்.

தோர்ப்சான் சிக்கிலேண்டு
பிறப்பு3 ஆகத்து 1923
இறப்பு7 நவம்பர் 2014 (அகவை 91)
அறிவியல் வாழ்க்கைப் போக்கு

இவர் நார்வேயின் வார்டெய்க் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் நொபிலியம், இலாரென்சியம் ஆகியவற்றின் யுரேனியப் பின்-தனிமங்களைக் கண்டுபிடித்த இலாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் ஆவார். நார்வே நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 1969 முதல் 1993 வரை அங்கு பணியாற்றினார்.[2][3] நார்வேயின் தொழில்நுட்ப அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Henriksen, Thormod (14 November 2014). "Torbjørn Sikkeland" (in Norwegian). Aftenposten: p. 28. 
  2. Svare, Ivar "Torbjørn Sikkeland". Norsk biografisk leksikon. Ed. Helle, Knut. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 13 செப்டம்பர் 2014. 
  3. "Torbjørn Sikkeland". Store norske leksikon. Oslo: Norsk nettleksikon. அணுகப்பட்டது 13 செப்டம்பர் 2014. 
  4. "SIKKELAND, Torbjørn" (in Norwegian). Norwegian Academy of Technological Sciences. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)