அழ. வள்ளியப்பா

எழுத்தாளர்

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

அழ. வள்ளியப்பா
குழந்தைக்கவிஞர்
குழந்தைக்கவிஞர்
பிறப்புவள்ளியப்பா
(1922-11-07)நவம்பர் 7, 1922
இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புமார்ச்சு 16, 1989(1989-03-16) (அகவை 66)
சென்னை
தொழில்கவிஞர், பத்திரிகை ஆசிரியர், குழந்தை எழுத்தாளர், வங்கிப் பணியாளர்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கல்விபள்ளியிறுதி வகுப்பு
வகைதமிழ் இலக்கியம்
கருப்பொருள்குழந்தை இலக்கியம்
இலக்கிய இயக்கம்குழந்தை எழுத்தாளர் சங்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மலரும் உள்ளம்
குறிப்பிடத்தக்க விருதுகள்"தமிழ்ப் பேரவைச் செம்மல்" விருது
துணைவர்வள்ளியம்மை ஆச்சி
பிள்ளைகள்5

பிறப்பு

தொகு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார். [1] இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

எழுத்துப் பணி தொடக்கம்

தொகு

தொடர்ந்து படிக்க முடியாததால் 1940 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். "ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார்.

சக்தியில் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.

1941 -ல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -நவம்பரில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.

செய்தித்தாள் ஆசிரியர்

தொகு

வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.

குழந்தை எழுத்தாளர் சங்கம்

தொகு

குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.[1]

உறுப்பினர்

தொகு

அழ. வள்ளியப்பா இலக்கியம், நூல், கலை தொடர்பான பின்வரும் குழுகளில் பங்காற்றினார்:[1]

  1. தமிழ்நாட்டு அரசினரின் குழந்தை இலக்கிய வளர்ச்சி - ஆராய்ச்சிக் குழு
  2. திரைப்படப் பரிசுத்தேர்வுக் குழு
  3. பாரதீய வித்யா பவன் ஆட்சிக்குழு
  4. தேசிய புத்தக டிரஸ்ட் ஆலோசனைக்குழு

நூல்கள்

தொகு

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

  1. அம்மாவும் அத்தையும்
  2. இனிக்கும் பாடல்கள் (பாடல்); இ.பதி. செப்டம்பர் 1991; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 27 பாடல்கள்
  3. ஈசாப் கதைப் பாடல்கள் - முதல் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
  4. ஈசாப் கதைப் பாடல்கள் - இரண்டாம் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
  5. ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல்); முழுயான தொகுப்பு; 1987 சனவரி; குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40; 38 பாடல்கள்
  6. உமாவின் பூனைக் குட்டி
  7. எங்கள் கதையைக் கேளுங்கள் (விலங்கியற் கட்டுரைகள்); மு.பதி 1962; இ.பதி 1967 மார்ச்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 10 விலங்குகள் தங்களது கதையைத் தாங்களே கூறுகின்றன.
  8. எங்கள் பாட்டி
  9. கதை சொன்னவர் கதை - நூல் 1 (வரலாறு); 1962 மே; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  10. கதை சொன்னவர் கதை - நூல் 2 (வரலாறு); 1962 மே; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  11. கதை சொன்னவர் கதை - நூல் 3 (வரலாறு); 1962 மே; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  12. குதிரைச் சவாரி (நெடுங்கதை); ஏப்ரல் 1978; பழநியப்பா பிரதர்ஸ், சென்னை;
  13. குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி (பாடல்): 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 50 பாடல்கள்
  14. குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி (பாடல்); 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை;
  15. குழந்தைக் கவிஞரின் வேடிக்கைப் பாடல்கள்; 1962
  16. குழந்தைக்குரல் (பாடல்) தமிழ்நிலையம், புதுக்கோட்டை; பாடல்கள்
  17. கேள்வி நேரம்
  18. சிட்டுக் குருவி (பாடல்); 1949 ஜனவரி; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 16 பாடல்கள்
  19. சிரிக்கும் பூக்கள் (பாடல்); 1986; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 110 பாடல்கள்
  20. சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல்); 6ஆம் பதிப்பு 1992; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 26 பாடல்கள்
  21. சின்னஞ்சிறு வயதில் (வரலாறு), , குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 38பேர்களின் இளமைக்கால அனுபவங்கள்; தமிழ்நாடு அரசினர் பரிசுபெற்றது.
  22. சுதந்திரம் பிறந்த கதை (வரலாறு)
  23. சோனாவின் பயணம் (கதை)
  24. திரும்பி வந்த மான் குட்டி (கதை)
  25. நமது நதிகள்: தென்னாட்டு ஆறுகள் (புவியியல்), தேசிய புத்தக டிரஸ்ட், புதுதில்லி. 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
  26. நல்ல நண்பர்கள் (கதை); பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  27. நான்கு நண்பர்கள்: பஞ்சதந்திரக் கதைகள் (கதை); 1962 நவம்பர் 14; எஸ்.ஆர்.சுப்பிரமணியபிள்ளை, திருநெல்வேலி;
  28. நீலா மாலா (கதை); 1977 ஆகஸ்ட்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
  29. நேரு தந்த பொம்மை (பாடல்கள்); 1977 நவம்பர் 14; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 21 பாடல்கள்
  30. நேருவும் குழந்தைகளும் (வாழ்க்கை வரலாறு); 1963;
  31. பர்மா ரமணி (கதை); 1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
  32. பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி); தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  33. பாட்டிலே காந்தி கதை (பாடல் வரலாறு); 1968 அக்டோபர்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; இந்திய ஒன்றிய அரசின் பரிசு பெற்றது
  34. பாட்டுப் பாடுவோம் (பாடல்); 1998 ஏப்ரல்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 12 பாடல்கள்
  35. பாடிப் பணிவோம் (பாடல்); அக்டோபர் 1979; செல்வி பதிப்பகம், காரைக்குடி; 23 பக்திப்பாடல்கள்
  36. பாலர் பாடல் (பாடல்); 1947 ஆகஸ்ட்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 18 பாடல்கள்
  37. பிள்ளைப் பருவத்திலே! (வரலாறு); 1968; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 29 பெரியோர்களைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  38. பெரியோர் வாழ்விலே முதல் தொகுதி (வரலாறு); 1955; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; எழுவர் வாழ்க்கை நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  39. பெரியோர் வாழ்விலே இரண்டாம் தொகுதி (வரலாறு); குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; ஐவர் வாழ்க்கை நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்
  40. மணிக்கு மணி
  41. மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), 1944 முதற்பதிப்பு; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; 23 பாடல்கள் கொண்டது,
  42. மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), 1954 இரண்டாம்பதிப்பு; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 135 பாடல்கள் கொண்டது; இந்திய ஒன்றியம்; தமிழ்நாடு அரசுகளின் பரிசு பெற்றது.
  43. மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி (பாடல்), 1961; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 117 பாடல்கள்
  44. மல்லிகை (பாடல்)
  45. மிருகங்களுடன் மூன்று மணி
  46. மூன்று பரிசுகள்
  47. ரோகந்தாவும் நந்திரியாவும்
  48. ரோஜாச் செடி (கதை); மூன்றாம் பதிப்பு 1968 மே; ஸ்டார் பிரசுரம், சென்னை
  49. வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம், 1979, வானதி பதிப்பகம், சென்னை
  50. வாழ்க்கை விநோதம்
  51. விடுகதை விளையாட்டு
  52. வித்தைப் பாம்பு (மொழிபெயர்ப்புக் கதை)
  53. வெளிநாட்டு விடுகதைகள்
  54. வேட்டை நாய்

தொகுத்த நூல்கள்

தொகு
  1. கேள்வி நேரம்: பெரியோரின் கேள்விகளும் பிள்ளைகளின் பதில்களும்; 1988 ஏப்ரல்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை

பதிப்பித்த நூல்கள்

தொகு
  1. நிமிஷக் கதைகள்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை.
  2. பாலர் கதைகள் (3ஆம் பதிப்பு); தமிழ்நிலையம், புதுக்கோட்டை

மொழிபெயர்த்த நூல்கள்

தொகு
  1. ரோகந்தாவும் நந்திரியாவும் (கதை); மூல ஆசிரியர்: கிருஷ்ண சைதன்யா; முதற்பதிப்பு 1972, நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை.
  2. எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் (கதைகள்); மூல ஆசிரியர்: சாந்தா ரங்காச்சாரி; முதற்பதிப்பு 1977; நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை.

சொற்பொழிவுகள்

தொகு

பாராட்டும் விருதும்

தொகு
  • 1963 ஆம் ஆண்டில் இலக்னோ நடைபெற்ற அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்பட்டன.
  • குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
  • 1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
  • 1982ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • 1970 நவம்பர் 22ஆம் நாள் "குழந்தைக்கவிஞர் இலக்கியப்பணி" வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது.
  • பூவண்ணன் தலைமையில் இயங்கிய பாலர் பண்பாட்டுக்கழகம் 1980ஆம் ஆண்டில் 'வள்ளியப்பா வானொலி-தொலைக்காட்சிச் சிறுவர் சங்கம்' என்னும் பிரிவைத் தொடங்கியது.
  • 'பிள்ளைக்கவியரசு' என்னும் பட்டத்தை சென்னை பாரதி இளைஞர் சங்கம் வழங்கியது.
  • 'மழலைக்கவிச்செம்மல்' என்னும் பட்டத்தை காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டுவிழாக்குழு வழங்கியது.

வாழ்க்கை வரலாறு

தொகு

அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மணிவிழா ஆண்டில் "குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு) என்னும் நூலை முனைவர் பூவண்ணன் எழுதினார். அதனை 1982 நவம்பரில் வானதி பதிப்பகம் வெளியிட்டது.

ஆய்வு

தொகு

அழ. வள்ளியப்பாவின் படைப்புகளைப் பலரும் பல்கலைக்கழகப் பட்டங்களுக்காக ஆய்வுசெய்திருக்கிறார்கள். அவற்றுள் சில:

  1. குழந்தை இலக்கியத்தில் வள்ளியப்பா ஒரு வழிகாட்டி; கதி.கணேசன்;

சான்றடைவு

தொகு
  1. 1.0 1.1 1.2 பூவண்ணன் எழுதிய குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா: வாழ்க்கை வரலாறு, சென்னை வானதி பதிப்பகம், 1982 நவம்பர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழ._வள்ளியப்பா&oldid=4142722" இலிருந்து மீள்விக்கப்பட்டது