தி. ஜ. ரங்கநாதன்
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.[1]
தி. ஜ. ரங்கநாதன் | |
---|---|
பிறப்பு | 1901 |
இறப்பு | 1974 |
பணி | செய்தித்தாள் ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்புதொகு
இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி பெற்று சிலகாலம் கர்ணமாக வேலை பார்த்தார். திண்ணைப் பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா, மளிகைக்கடைச் சிற்றாள் என பல வேலைகள் பார்த்தார். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுந்தரவல்லி. 1916 இல் அவர் படித்த ’ஐரோப்பிய சரித்திரம்’ என்ற தமிழ் நூலின் ஐந்து பாகங்களும் தான் தனக்குத் தலைமை ஆசான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய முதல் கட்டுரை ஆனந்தபோதினி இதழிலும் கவிதை ஸ்வராஜ்யா இதழிலும் 1916 ஆம் ஆண்டில் வெளிவந்தன. ’சமரபோதினி’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, ஊழியன், சுதந்திரச் சங்கு, ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா ஆகிய இதழ்களில் பணியாற்றினார். ‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர். அது ஆரம்பிக்கும்போது பிறந்த தன் மகளுக்கு ‘மஞ்சரி’ என்றே பெயர் வைத்தார். ‘பாப்பா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
படைப்புகள்தொகு
- சிறுகதை
‘நொண்டிக்கிளி’, ‘காளி தரிசனம்’ , ‘சந்தனக் காவடி’ போன்ற தொகுதிகள். முதலாவது தலைப்பு உருக்கமான கதை இரண்டாவதும் மூன்றாவதும் குறும்பானவை. ‘எப்படி எழுதினேன்’ புத்தகத்தில் இவற்றைப் பற்றி எழுதி இருக்கிறார்.
- கட்டுரை
தமிழ் இலக்கியத்தில் ஈ.வீ.லூகாஸ், கார்டினர், மாக்ஸ் பீர்போம் போன்ற பல கட்டுரையாளர்களையும் தோற்கடிக்கும் முறையில் எழுதியவர். கட்டுரைத் துறைக்கு ஒரு முன்னோடி.பல தொகுதிகள்
மொழிபெயர்ப்புதொகு
வ. எண் | நூலின் பெயர் | பொருள் | மூல நூலாசிரியர் | ஆண்டு | பதிப்பகம் | குறிப்பு |
01 | குமாவூன் புலிகள் | ஆட்கொல்லி புலிகள் | ஜிம் கார்பெட் | ? | ? | |
02 | ஒரே உலகம் | ? | வெண்டல் வில்கி | ? | ? | |
03 | அலமுவின் அதிசய உலகம் | ஆங்கிலப் புதினம் | லூயி கரால் | ? | ஆலிஸ் ஒன்டர்லேண்ட் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு | |
04 | கூண்டுக்கிளி | வங்காள நாடகங்கள் | ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாய | 1941 | சக்தி காரியாலயம், சென்னை. | ஐந்து நாடகங்கள் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு |
05 | அபேதவாதம் | அரசியல் | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | ? | சக்தி காரியாலயம், சென்னை. |
படைப்புகள் நாட்டுடைமையாக்கம்தொகு
தி.ஜ.ர.வின் படைப்புகளை தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2006 - 7 ஆம் நிதியாண்டில் 600 ஆயிரம் ரூபாயை அவர்தம் கால்வழியினருக்குப் பரிவுத்தொகையாக வழங்கி நாட்டுடைமை ஆக்கியது.
மேற்கோள்கள்தொகு
தினமணி, பார்த்த நாள்:அக்டோபர் 10, 2012