தினமணி இந்தியாவின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, தருமபுரி, புதுதில்லி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.

தினமணி
Dinamani
Dinamani Logo.jpeg
வகைதினசரி நாளிதழ்
வடிவம்தாள்
வெளியீட்டாளர்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
நிறுவியதுசெப்டம்பர் 11, 1934
அரசியல் சார்புஇல்லை
மொழிதமிழ்
தலைமையகம்தமிழ்நாடு
இணையத்தளம்www.dinamani.com

தினமணியை வெளியிடும் நிறுவனம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.

முதல் இதழ்தொகு

1934 செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாளன்று அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.

தினமணிக் கதிர்தொகு

தினமணிக் கதிர் என்பது தினமணி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழுடன் இலவசமாக அளிக்கப்படும் இதழாகும். பல்சுவை இதழாக வெளியாகும் இந்த இதழில் சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைப் பகுதி, துணுக்குகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

 
கே.வைத்தியநாதன்

தினமணி ஆசிரியர்கள்தொகு

இணையவழிப் பயணம்தொகு

"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் வெளிவருகிறது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினமணி&oldid=3369349" இருந்து மீள்விக்கப்பட்டது