கி. கஸ்தூரிரங்கன்

கி. கஸ்தூரிரங்கன் (சனவரி 10 1933 - மே 4 2011) தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

கி. கஸ்தூரிரங்கன்
பிறப்பு10 சனவரி 1933
இறப்பு4 மே 2011 (அகவை 78)

வாழ்க்கை தொகு

கி.கஸ்தூரிரங்கன். 10-1.1933ல் செங்கல்பட்டு, களத்தூரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1961 இல் தில்லிக்குச் சென்று நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபராகப் பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார்.

1981 முதல் 1991 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராக பணியாற்றி வந்தார். பொதுச்சேவைக்காக ஸ்வச்சித் என்ற அமைப்பை நிறுவி செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றினார்

இலக்கியப்பணி தொகு

கஸ்தூரிரங்கன் புதுக்கவிதையில் ஆர்வம்கொண்டவர். அவரது கவிதைகள் முன்னோடி சிற்றிதழான எழுத்து இதழில் வெளிவந்துள்ளன. தில்லியில் இருக்கும் காலத்தில் அங்கே வாழ்ந்த க. நா. சுப்பிரமணியம், ஆதவன், தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்ற எழுத்தாளர்களின் உதவியுடன் கணையாழி இதழைத் தொடங்கினார். கஸ்தூரிரங்கன் ஐந்து புதினத் தொடர்களை தினமணி கதிர் வார இதழில் எழுதியிருக்கிறார். ஞானவெட்டியான் என்ற பேரில் கவிதைகள் எழுதினார்.

மறைவு தொகு

கஸ்தூரிரங்கன் 2011 மே 4 காலை 6 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருடைய மனைவி பெயர் இந்து. இவருக்கு பாலாஜி, மோகன் என இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்[1].

மேற்கோள்கள் தொகு

  1. தினமணி முன்னாள் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் காலமானார்[தொடர்பிழந்த இணைப்பு], தினமணி, மே 4, 2011

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._கஸ்தூரிரங்கன்&oldid=3366053" இலிருந்து மீள்விக்கப்பட்டது