களத்தூர்

களத்தூர் (Kalathur) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள[1] பஞ்சாயத்து கிராமமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தின்[2] ஒரு பகுதி ஆகும். இது தஞ்சாவூருக்கு தெற்கே[3] 67 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மாநில நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்டசபைத் தோ்தலில் பேராவூரணி சட்டமன்றத் [4]தொகுதியின் கீழும், தஞ்சாவுா் பாராளுமன்ற தொகுதியின்[5] கீழும் களத்தூர் வருகிறது.

அமைவிடம்தொகு

இது தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் கொரமண்டல் கடற்கரைக்கு 15 கிமீ தொலைவில் உள்ளது.இது வடக்கில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியாலும்,மேற்கில் மற்றும் வடமேற்கில் செருவாவிடுதி ஊராட்சியாலும்,கிழக்கில் கல்லுாரணிக்காடு ஊராட்சியாலும், தெற்கில் பழையநகரம் மற்றும் தென்னங்குடி ஊராட்சியாலும் சூழப்பட்டுள்ளது.

தொழில்தொகு

இந்த கிராமம் வளமான காவேரி டெல்டா[6] பகுதியில் ஒரு பகுதியாக உள்ளது, மற்றும் விவசாயம் களத்துாா் மக்களின் முக்கிய தொழில் ஆகும்[7]. தென்னை, நெல், பருத்தி, கரும்பு, வாழை, கொக்கோ ஆகியவை சாகுபடி செய்யப்பட்டாலும் நெல் சாகுபடி அதிக அளவில் பரவலாக பயிரிடப்படுகிறது. பெருமளவில் கால்நடைகள் வளர்ப்பு ஒரு பெரிய வாழ்வாதாரமாக உள்ளது.[8] களத்துாா் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் தென்னை சாகுபடிக்கு பெயா் பெற்றவை. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் , பொள்ளாச்சி காய்களைவிட அதிக பருப்பு உள்ளதாகவும், ருசியாகவும், நிறைய தண்ணீா் உள்ளதாகவும் இருக்கும். தென்னையை ஆதாராமக்கொண்ட தொழிற்சாலைகளான தேங்காய் எண்ணெய் ஆலைகளும், கயிறு தொழிற்சாைலகளும் அதிகமாக காணப்படுகிறது.

நிா்வாகம்தொகு

களத்துாா் ஊராட்சியானது , களத்துாா் கிழக்கு, களத்துாா் மேற்கு,நெடுங்காடு புக்கன்விடுதி மற்றும் சித்துக்காடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றத் தலைவரால் நிா்வாகிக்கப்படுகிறது.[9]

மக்கள் தொகைதொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1576 குடும்பங்கள் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 6424 -ல் 3190 போ் ஆண்கள், போ் பெண்கள் ஆவா். தேசிய சராசாி கல்வியறிவு சதவீதமான த்தில் இக்கிராமத்தின் சராசாி கல்வி வீதம் 79.09 சதவீதமாகும். தமிழ் மொழியே பேச்சு மொழியாகவும், அலுவலக மொழியாகவும் அதிக அளவில் பேசப்படுகிறது. சைவ சித்தாந்தத்தையுடைய இந்துக்கள் இங்கு அதிகமாக உள்ளனா். இஸ்லாம் பேசுபவா்களும் சிலா் உள்ளனா். கிறித்தவ மக்கள் இல்லை.

நீா்ப்பாசனம்தொகு

 • கல்லணைக் கால்வாய் நதியின் உதவியால் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது
 • கல்லணைக் கால்வாய் காவிாி நதி நீரை இக்கிராமத்திற்கு கொண்டு வருகிறது
 • ஏாி, குளம், குட்டைகளின் மூலமும் பாசனம் செய்யப்படுகிறது.
 • தற்காலத்தில் ஆழ்குழாய்க்கிணறுகள் மூலம் அதிகமாக பாசனம் செய்யப்படுகிறது.

போக்குவரத்துதொகு

 • களத்துாாில் மாநில நெடுஞ்சாலை 29 மாவட்ட நெடுஞ்சாலை 829 பயணிக்கின்றன[10]
 • பட்டுக்கோட்டைக்கும் பேராவுரணிக்கும் அடிக்கடி பஸ் போக்குவரத்து உள்ளது
 • பேராவுரணியிலிருந்தும் , திருச்சிற்றம்பலத்திலிருந்தும் களத்துாருக்கு அதிகமான சிறிய பேருந்து (மினி பஸ்) போக்குவரத்து உள்ளது.
 • அருகிலுள்ள ரயில்வே நிலையம் பேராவுரணி ரயில் நிலையம் 8 கி.மீ.ல் உள்ளது.[11] தஞ்சாவுா் ரயில் நிலையம் 67 கி.மீ.துாரத்திலும். திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 103 கி.மீ. துாரத்திலும் உள்ளது.
 • திருச்சிராப்பள்ளி சா்வதேச விமான நிலையம் 97 கி.மீ. துாரத்திலும் உள்ளது.[12]
 • அருகிலுள்ள பேராவுரணியிலிருந்து சென்னைக்கும், கோவைக்கும் நேரடியாக பேருந்து வசதி உள்ளது.

மேற்கோள்தொகு

 1. "Kalathur - Part of Peravurani Union" (PDF). TNRD.gov.in. Retrieved 16 June 2017.
 2. Kalathur - Part of Pattukkottai Talu
 3. Kalathur - Part of Thanjavur District
 4. Profile of MLA's in Peravurani Constituency 2011, Thanjavur". TamilSpider.com. 30 June 2011. Retrieved 16 June 2017.
 5. alathur, Thanjavur MP constituency" (PDF). Thanjavur.nic.in. Retrieved 16 June 2017.
 6. Kalathur Cauvery delta" (PDF). TNAU.ac.in. Retrieved 16 June 2017
 7. Kalathur Cococnut" (PDF). CoconutBoard.in. Retrieved 16 June 2017
 8. Kalathur Cococnut" (PDF). CoconutBoard.in. Retrieved 16 June 2017
 9. Kalathur - A village in Peravurani taluka". www.GloriousIndia.com. Retrieved 16 June 2017.
 10. east-tamil-nadu-india.html Kalathur road no 829[தொடர்பிழந்த இணைப்பு]
 11. Kalathur Village, Peravurani Taluk, Thanjavur District". www.OneFiveNine.com. Retrieved 16 June 2017
 12. "Kalathur- Peravurani - Soki.in - Indian Villages". soki.in. Retrieved 16 June 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=களத்தூர்&oldid=3238915" இருந்து மீள்விக்கப்பட்டது