பட்டுக்கோட்டை வட்டம்

பட்டுக்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பட்டுக்கோட்டை நகரம் உள்ளது.

இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, திருச்சிற்றலம்பலம், அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, நம்பிவயல், பெரியகோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூர், ஆண்டிக்காடு, மற்றும் பட்டுக்கோட்டை என 10 உள்வட்டங்களும், 175 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்தொகு

  • இந்துக்கள் = 85.42%
  • இசுலாமியர்கள் = 10.5%
  • கிறித்தவர்கள் = 3.85%
  • பிறர்= 0.23%

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்கோட்டை_வட்டம்&oldid=2724727" இருந்து மீள்விக்கப்பட்டது