பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பட்டுக்கோட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,13,231 ஆகும். இதில் பட்டியல் இன மக்கள் தொகை 16,708 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 94 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]
- அணைக்காடு
- ஆத்திக்கோட்டை
- ஆலடிக்குமுளை
- இராஜாமடம்
- ஏரிப்புறக்கரை
- ஏனாதி
- ஒதியடிகாடு
- கரம்பயம்
- கழுகப்புலிக்காடு
- கார்காவயல்
- கொண்டிகுளம்
- சாந்தாங்காடு
- சுந்தரநாயகிபுரம்
- சூரப்பள்ளம்
- செண்டாங்காடு
- செம்பாளுர்
- சேண்டாக்கோட்டை
- த. மறவக்காடு
- த. மேலக்காடு
- த. வடகாடு
- தாமரங்கோட்டை (தெற்கு)
- தாமரங்கோட்டை (வடக்கு)
- திட்டக்குடி
- துவரங்குறிச்சி
- தொக்காலிக்காடு
- நடுவிக்கோட்டை
- நம்பிவயல்
- நரசிங்கபுரம்
- நாட்டுச்சாலை
- பண்ணவயல்
- பரக்கலக்கோட்டை
- பழஞ்சூர்
- பள்ளிகொண்டான்
- பாளமுத்தி
- புதுக்கோட்டை உள்ளூர்
- பொன்னவராயன்கோட்டை
- மகிழங்கோட்டை
- மழவேனிற்காடு
- மாளியக்காடு
- முதல்சேரி
- வீரக்குறிச்சி
- வெண்டாக்கோட்டை
- வேப்பங்காடு