முதன்மை பட்டியைத் திறக்கவும்

செங்கல்பட்டு

செங்கழுநீர் பூக்களால் நிறைந்திருந்த செங்கழுநீர் பட்டு... (செங்கல்பட்டு)


செங்கல்பட்டு (Chengalpattu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகும். சென்னையின் புறநகர் பகுதியாகும். 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

செங்கல்பட்டு
CHENGALPET
செங்கை நகரம்
முதல் நிலை நகராட்சி
செங்கல்பட்டு is located in தமிழ் நாடு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு is located in இந்தியா
செங்கல்பட்டு
செங்கல்பட்டு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12°41′31″N 79°58′49″E / 12.691836°N 79.980341°E / 12.691836; 79.980341ஆள்கூறுகள்: 12°41′31″N 79°58′49″E / 12.691836°N 79.980341°E / 12.691836; 79.980341
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
மண்டலம்தொண்டை மண்டலம்
சட்டமன்றத் தொகுதிசெங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
அருகிலுள்ள இரயில் நிலையம்செங்கல்பட்டு இரயில் நிலையம்
வருவாய் கோட்டம்செங்கல்பட்டு வருவாய் கோட்டம்
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைமுதல் நிலை நகராட்சி
 • Bodyசெங்கல்பட்டு நகராட்சி
 • மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
 • மக்களவை உறுப்பினர்திரு
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு.
 • நகராட்சித் தலைவர்திரு.அன்புச் செல்வன்
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்36
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்65,695
 • தரவரிசை76
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு603001,603002,603003,603004
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91 - 044
வாகனப் பதிவுTN 19
திருச்சியிலிருந்து தொலைவு271 கிமீ
சென்னையிலிருந்து தொலைவு63 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு133 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு116 கி.மீ
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு41 கி.மீ
விழுப்புரத்திலிருந்து தொலைவு109 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு98 கிமீ
புதுச்சேரியிலிருந்து தொலைவு104 கிமீ
இணையதளம்செங்கல்பட்டு நகராட்சி

பெயர் மூலம்தொகு

முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.

வரலாறுதொகு

விஜயநகரப் பேரரசு வழி அரசர் கட்டிய கோட்டை இங்குள்ளது. அவர்களின் தலைநகராக குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°42′N 79°59′E / 12.7°N 79.98°E / 12.7; 79.98 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 30,982 ஆண்கள், 31,597 பெண்கள். செங்கல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். செங்கல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்விதொகு

இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன. உதாரணமாக இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரியை கூறலாம். இன்னும் பல கல்வி நிலையங்கள் உள்ளன.

போக்குவரத்துதொகு

தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டின் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு ஒரு தொடருந்து சந்திப்பாகும். முக்கிய அகலப் பாதையைக் கொண்டுள்ள இவ்வூரில் தமிழ்நாட்டின் தெற்கு நோக்கிச் செல்லும் தொடருந்துகள் நின்றுசெல்லும்.

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்பட்டு&oldid=2848438" இருந்து மீள்விக்கப்பட்டது