கூடுவாஞ்சேரி

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


நந்திவரம்-கூடுவாஞ்சேரி (Nandivaram-Guduvancheri) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் . வண்டலூர் வட்டம் அமைந்த நகராட்சி ஆகும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ளது. இது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே, சென்னையில் இருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 603202 ஆகும். சென்னை புறநகர் பகுதியில் வளர்ந்து வளரும் குடியிருப்பு மற்றும் தொழில் வளர்ச்சிப் பகுதியாகும்.

கூடுவாஞ்சேரி
—  நகராட்சி  —
கூடுவாஞ்சேரி
அமைவிடம்: கூடுவாஞ்சேரி, சென்னை புறநகர்
ஆள்கூறு 12°50′42″N 80°03′25″E / 12.84506°N 80.05707°E / 12.84506; 80.05707
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

44,098 (2011)

5,188/km2 (13,437/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.50 சதுர கிலோமீட்டர்கள் (3.28 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/nandivaram-guduvancheri

கூடுவாஞ்சேரி நகராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)க்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகமைந்த நகரங்களும், ஊர்களும்

தொகு
  1. செங்கல்பட்டு - 19 கிமீ
  2. சென்னை - 37 கிமீ
  3. திருப்போரூர் - (கிழக்கில்) - 25 கிமீ
  4. திருப்பெரும்புதூர் - (மேற்கில்) - 42 கிமீ
  5. பீர்க்கன்கரணை - (வடக்கில்) - 5 கிமீ
  6. மறைமலைநகர் - (தெற்கில்) - 4 கிமீ
  7. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் - 22 கிமீ

மக்கள் வகைப்பாடு

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 வார்டுகள் கொண்ட நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி 11,252 குடும்பங்களையும், 44,098 மக்கள்தொகையும் கொண்டது. ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 22,264 மற்றும் பெண்கள் 21,834 ஆகவுள்ளனர். இதன் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 896 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.19%, இசுலாமியர்கள் 8.71%, கிறித்தவர்கள் 5.68%, சமணர்கள் 0.19%, மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். [3]

கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம்

தொகு

சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார தொடருந்துகள் மற்றும் 6 பயணியர் தொடருந்துகளும் கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Nandivaram - Guduvancheri Population Census 2011
  4. கூடுவாஞ்சேரி தொடருந்து நிலையம்

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடுவாஞ்சேரி&oldid=3856402" இலிருந்து மீள்விக்கப்பட்டது