வலைவாசல்:சென்னை
தொகு
சென்னை - அறிமுகம்சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராசு (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கின்றது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. தொகு
சிறப்புக் கட்டுரை
சென்னை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது.இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும்.
தொகு
உங்களுக்குத் தெரியுமா?
தொகு
பகுப்புகள்தொகு
செய்திகள்இந்த நாள், இனிய நாள்
தொகு
விக்கித் திட்டங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சென்னை
தொகு
நீங்களும் பங்களிக்கலாம்
தொகு
சிறப்புப் படம்பனகல் பூங்கா, சென்னை தியாகராய நகரில் (தி. நகர்) உள்ள பூங்காவாகும். சென்னை மாகாணத்தின், இரண்டாவது முதலமைச்சராயிருந்த பனகல் அரசர் இப்பூங்காவை உருவாக்கினார், அவருடைய பெயரே இப்பூங்காவிற்கு வழங்கப்பட்டது. இந்தப் பூங்காவை உருவாக்கிய பனகல் அரசனின் சிலையே மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது. தொகு
தொடர்புடைய வலைவாசல்கள் |