புரசைவாக்கம்

தமிழ்நாட்டின் சென்னையில், சுறுசுறுப்பாக காணப்படும் வியாபார நகர்களில் ஒன்று.

புரசைவாக்கம் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். புரசைவாக்கம், 'புரசை' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு, குடியிருப்புப் பகுதிகளும், வணிக வளாகங்களும் நிறைந்து காணப்படுகின்றன. .

புரசைவாக்கம்
—  நகர்ப்பகுதி  —
புரசைவாக்கம்
இருப்பிடம்: புரசைவாக்கம்

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி மத்திய சென்னை
மக்களவை உறுப்பினர்

தயாநிதி மாறன்

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புரசையின் கவர்ச்சியில் அபிராமி மெகாமாலும் ஒன்று. இம்மாலில் நிறைய கண்கவரும் கடைகளும் உள்ளன.

போக்குவரத்து தொகு

புரசைவாக்கத்தின் அருகில் எழும்பூர், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையங்கள் உள்ளன. மாநகரப் பேருந்துகள், நகரின் பிற பகுதிகளுக்கு, புரசைவாக்கம் வழியாக இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள ஊர்கள் தொகு

எழும்பூர், பெரியமேடு, ஓட்டேரி, சூளை, கீழ்ப்பாக்கம், டவுட்டன், புளியந்தோப்பு, கெல்லீசு, அயனாவரம் ஆகியவை புரசைவாக்கத்திற்கு அருகிலுள்ள முக்கிய ஊர்கள் ஆகும்.

வழிபாட்டுத் தலங்கள் தொகு

 • லூதரன் தேவாலயம்
 • அடைல்கலநாதர் தேவாலயம்
 • புனித அந்திரேயா தேவாலயம்
 • புனித பவுல் தேவாலயம்
 • புனித மதியா தேவாலயம்
 • இம்மானுவேல் மெதடிஸ்ட் தேவாலயம்
 • தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம்
 • அபோஸ்தல தேவாலயம்
 • அப்போஸ்தல ஐக்கிய சபை

மேலும், மிகவும் பழமையான,

 • புகழ்வாய்ந்த கங்காதீஸ்வரர் கோவில்,
 • சோலை அம்மன் கோவில்

புரசையில் பெயர் பெற்ற கோவில்களாகும்.

 
வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீ கங்காதீசுவரர் கோவில், புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.


மேற்கோள்கள் தொகு

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 

வெளியிணைப்புகள் தொகு

Purasawalkam: From old town to shopping hub

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரசைவாக்கம்&oldid=3697520" இருந்து மீள்விக்கப்பட்டது