கொளத்தூர் வட்டம்
கொளத்தூர் வட்டம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம் ஆகும். இதையும் சேர்த்து சென்னையில் மொத்தம் பதினேழு வட்டங்கள் உள்ளன.[1][2]
கொளத்தூர் வட்டம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°07′26″N 80°12′44″E / 13.1240°N 80.2121°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வருவாய் வட்டம் | கொளத்தூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.24 km2 (2.41 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,78,168 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600099 |
தொலைபேசி குறியீடு | +9144******** |
புறநகர்ப் பகுதிகள் | கொளத்தூர், பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், பெரம்பூர், பெரியார் நகர், அகரம், ஜவஹர் நகர், சிறுவள்ளூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
உருவாக்கம்
தொகுஅயனாவரம் வருவாய் வட்டத்தின் 8 வருவாய் கிராமங்களில், 3 வருவாய் கிராமங்களைக் கொண்டு கொளத்தூர் வட்டம் 28 ஆகஸ்டு 2024 அன்று நிறுவப்பட்டது. கொளத்தூர் வட்டம் கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. கொளத்தூர் வட்டத்தின் தலைமையகமாக கொளத்தூர் உள்ளது.[3]
பரப்பளவு
தொகுகொளத்தூர் வட்டத்தின் பரப்பு சுமார் 6.24 ச.கி.மீ. ஆகும்.[4]
மக்கள் தொகை
தொகுகொளத்தூர் வட்டத்தில் 3,78,168 மக்கள் வாழ்கின்றனர்.[5]
வருவாய் கிராமங்கள்
தொகுபெரவள்ளூர், சிறுவள்ளூர் மற்றும் கொளத்தூர் ஆகிய கிராமங்கள் கொளத்தூர் வட்டத்தில் அடங்கும்.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ DIN (2024-08-28). "அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
- ↑ அயனாவரத்தை பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்: புதிய பணியிடங்கள் உடன் நிதி ஒதுக்கி உத்தரவு
- ↑ "'கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம்' - தமிழக அரசு அறிவிப்பு!". nakkheeran. 2024-08-28. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
- ↑ WebDesk. "கொளத்தூர் புதிய வருவாய் வட்டம் - தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
- ↑ தினத்தந்தி (2024-08-28). "கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் - தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
- ↑ ETV Bharat Tamil Nadu Team (2024-08-28). "புதிய வருவாய் வட்டமாக கொளத்தூர் அறிவிப்பு! - Kolathur new Revenue Taluk". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.