ஜவஹர் நகர்
ஜவகர் நகர் (ஆங்கில மொழி: Jawahar Nagar) என்பது தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சென்னை மாநகராட்சியின் மத்திய சென்னைப் பகுதியாகும். இதனருகே கொளத்தூர், பெரவள்ளூர், பெரியார் நகர், பெரம்பூர், அயனாவரம், செம்பியம், வில்லிவாக்கம் மற்றும் திரு. வி. க. நகர் ஆகிய புறநகர்ப் பகுதிகள் அமைந்துள்ளன. இறகுப் பந்து மைதானம் ஒன்று ஜவஹர் நகர் முதலாவது சுற்றுச் சாலையில் அமைந்துள்ளது.[1] சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்வானது 2023 ஆம் ஆண்டு தை மாதம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் போது, ஜவஹர் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.[2]
ஜவஹர் நகர் | |
---|---|
சென்னை மாநகராட்சிப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°06′44″N 80°13′39″E / 13.112250°N 80.227440°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | |
மாவட்டம் | சென்னை |
பெரு நகரம் | சென்னை மாநகராட்சி |
ஏற்றம் | 5 m (16 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 082 |
தொலைபேசி குறியீடு | 044 |
பெரு நகர வளர்ச்சி முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
மாநகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
உள்ளாட்சி அமைப்பு | சென்னை மாநகராட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்: மாணவர்களுடன் இறகுபந்து விளையாடி முதல்வர் அசத்தல்!". www.kalaignarseithigal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ Stalin Navaneethakrishnan. "சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா: எங்கெல்லாம் நடைபெறும்? முழு விபரம்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.