பெரம்பூர்
பெரம்பூர் (ஆங்கில மொழி: Perambur) என்பது சென்னை மாநகராட்சியின் வடக்கே உள்ள ஒரு பகுதியாகும். இது பெரம்பூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். சில நூறு வருடங்களுக்கு முன்பு, இங்கு மூங்கில் காடுகள் காணப்பட்டன. மூங்கிலின் மற்றுமொரு தமிழ்ப் பெயர் 'பிரம்பு' ஆகும். 'பிரம்பு உள்ள ஊர்' என்பதே மருவி 'பெரம்பூர்' ஆனது.[4] இங்கிருந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பெரம்பூர் பெரம்பூர் | |||||||
— புறநகர்ப் பகுதி — | |||||||
அமைவிடம்: பெரம்பூர், சென்னை , இந்தியா
| |||||||
ஆள்கூறு | 13°07′16″N 80°13′57″E / 13.121000°N 80.232600°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | சென்னை மாவட்டம் | ||||||
வட்டம் | பெரம்பூர் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||||||
சட்டமன்றத் தொகுதி | பெரம்பூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 54 மீட்டர்கள் (177 அடி) | ||||||
குறியீடுகள்
|
இந்தப் பகுதி, சென்னையுடன் பொ.ஊ. 1742-ஆம் வருடம் இணைக்கப்பட்டது. இந்தப் பகுதி, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. பெரம்பூரில் அமைந்துள்ள, நூற்றி இருபது ஆண்டுகள் பழமையான, தூய லூர்து அன்னை திருத்தலம், இப்பகுதியின் குறிப்பிடத்தகுந்த அடையாளமாக அமைந்துள்ளது. மேலும், புத்தர் கோவில் ஒன்றும், அமைதியான வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.
அரசு சார்பதிவாளர் அலுவலகம், பெரம்பூர் கிளை, 'தூய லூர்து அன்னை திருத்தலம்' அருகில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள இடங்கள்
தொகு- வியாசர்பாடி
- அயனாவரம்
- செம்பியம்
- அகரம்
- ஜவகர் நகர்
- திரு.வி.க. நகர்
- ஜமாலியா
- பெரவள்ளூர்
- கொளத்தூர்
- மூலக்கடை
- இரமணா நகர்
- kaushik
அருகிலுள்ள சிற்றூர் பகுதிகள்
தொகு- 'பந்தர்' தோட்டம்
- ஜெகன்னாதன் காலனி
- அமிர்தம்மாள் காலனி
- நீலம் தோட்டம்
- சின்னையன் காலனி
போக்குவரத்து
தொகுதொடருந்து
தொகு- 'பெரம்பூர்' தொடருந்து நிலையம்
பேருந்து
தொகு- 'பெரம்பூர் பேருந்து நிலையம்'
- 'பெரம்பூர் தொடருந்து நிலையம்' நிறுத்தம்.
கல்வி நிறுவனங்கள்
தொகுபள்ளிகள்
தொகு- சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளிகள்
- சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்
- தொன் போஸ்கோ நிறுவனப் பள்ளிகள்
- புனித தோமையர் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி
- இரயில்வே கூட்டு மேல்நிலைப்பள்ளி
பொழுதுபோக்கு
தொகுபூங்காக்கள்
தொகு- முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள்
- வீனஸ் பூங்கா
- மகாத்மா காந்தி பூங்கா
திரையரங்கம்
தொகு- S2 திரையரங்குகள்
வழிபாட்டுத் தலங்கள்
தொகுகோவில்கள்
தொகு- ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில்.
- ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில்.
கிறித்தவ திருத்தலங்கள்
தொகு- 'தூய லூர்து அன்னை திருத்தலம்', பெரம்பூர்.
- 'தென்னிந்திய திருச்சபை வெஸ்லி தேவாலயம்', பெரம்பூர்.
புத்தர் விகாரம்
தொகுமருத்துவமனைகள்
தொகு- A.C. அருள்தாஸ் மருத்துவமனை
- சென் மருத்துவமனை
- ஸ்ரீநிவாசப் பிரியா மருத்துவமனை
- நாராயணா நர்ஸிங் ஹோம்
- முத்து மருத்துவமனை
விளையாட்டு அரங்கங்கள்
தொகு- தென்னிந்திய இரயில்வே பெரம்பூர் விளையாட்டரங்கம்.
- தென்னிந்திய இரயில்வே பெரம்பூர் கூடைப்பந்து அரங்கம்.
- தென்னிந்திய இரயில்வே பெரம்பூர் இறகுப்பந்து அரங்கம்.
- சிறுவர்களுக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதானம் (முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா நுழைவாயில் அருகே).
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பெரம்பூர் பகுதி