பெரவள்ளூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையின் ஒரு பகுதி.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பெரவள்ளூர் (Peravallur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையின் மிக வேகமாக வளா்ச்சி பெற்ற மக்கள் குடியிருப்புப் பகுதி ஆகும்.[1]
பெரவள்ளூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°07′04.0″N 80°13′53.8″E / 13.117778°N 80.231611°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | சென்னை |
ஏற்றம் | 56 m (184 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அ.கு.எ. | 600 082 |
தொலைபேசி குறியீடு | 044xxxxxxxx |
திட்ட முகமை | செ.பெ.வ.கு. |
நகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகர சென்னை மாநகராட்சி |
அமைவிடம்
தொகு- பெரம்பூரிலிருந்து இரட்டைஏரி நோக்கிச் செல்லுகிற போது, இடையி்ல் அமைந்திருக்கும் இடமே, பெரவள்ளூர் ஆகும். இது வடசென்னைப் பகுதியில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
அருகிலுள்ள இடங்கள்
தொகுகொளத்தூர், அகரம், பெரியார் நகர், திரு. வி. க. நகர், ஜவஹர் நகர், செம்பியம் மற்றும் பெரம்பூர் ஆகியன பெரவள்ளூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
முக்கிய சாலைகள்
தொகுபேப்பர் மில்ஸ் சாலை, SRP கோவில் தெரு (வடக்கு), இராம் நகர் தெருக்கள் ஆகியவை இங்குள்ள முக்கிய சாலைகளாகும்.
அண்ணாசிலை மற்றும் காமராசா் சிலை முதலியன முக்கிய சாலை சந்திப்புகளில் தோற்றமளிக்கின்றன.
பள்ளிகள்
தொகுதொன் போஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி போன்ற பள்ளிகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
வழிபாட்டுத் தலங்கள்
தொகு- உயிர்த்த இயேசு கிறிஸ்து தேவாலயம், தொன்போஸ்கோ ஆலயம், செல்லியம்மன் கோவில் போன்ற தலங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் திருப்பதிக் குடை மிகச் சிறப்பாக இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற பெரவள்ளூர் சுந்தரராஜப் பெருமாள் கோயில்,[2] பெரவள்ளூர் சிந்தாமணி விநாயகர் கோயில்[3] மற்றும் பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்[4] ஆகியவை பெரவள்ளூர் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ V. Subburaj (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-040-9.
- ↑ "Arulmigu Sundararaja Perumal Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000097].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "Arulmigu Chindamani Vinayagar Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000443].,Chindamani Vinayagar,Chindamani Vinayagar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "Arulmigu Thanthonriyamman and Selliyamman Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000318].,Thanthodriyamman selliyamman,Thanthodriyamman selliyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.