புறநகர் (Suburb) என்பது, நகரங்களின் புறப் பகுதியில் அவற்றின் ஒரு பகுதியாக அல்லது நகரத்தில் இருந்து அன்றாடம் போக்குவரத்துச் செய்யக்கூடிய தொலைவில் தனியாக அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைக் குறிக்கும். முதல் வகைக்கு எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள புறநகர்களையும், இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காணப்படும் புறநகர்களையும் கூறலாம். சில புறநகர்கள் தன்னாட்சி நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான புறநகர்கள் உள்நகரப் பகுதிகளை விடக் குறைவான மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டனவாக இருக்கின்றன. மேம்பட்ட சாலைப் போக்குவரத்து வசதிகளும், தொடருந்துப் போக்குவரத்து வசதிகளும் அறிமுகமானதன் விளைவாக 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் பெரிய அளவில் புறநகர்கள் உருவாயின. தமது சூழலில் பெருமளவிலான மட்டமான நிலப்பரப்பைக் கொண்ட நகரங்களைச் சுற்றிப் புறநகர்கள் உருவாகின்றன.[1][2][3]

கொலராடோவில் உள்ள கொலராடோ இசுப்பிரிங்கு என்னும் புறநகர். மூடிய வழிகள் புறநகர் வடிவமைப்பின் வழமையான அம்சங்களில் ஒன்று.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Garreau, J., Edge City: Life on the New Frontier, Knopf Doubleday, 1992, p149
  2. Caves, R. W. (2004). Encyclopedia of the City. Routledge. p. 640. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415252256.
  3. Jain, Shri V. K. (2021-04-30). Applied Ecology and Sustainable Environment (in ஆங்கிலம்). BFC Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-90880-19-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநகர்&oldid=4100966" இலிருந்து மீள்விக்கப்பட்டது