கொளத்தூர் (சென்னை)

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கொளத்தூர் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரின் வடமேற்கில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.

கொளத்தூர்
கொளத்தூர் (சென்னை)
கொளத்தூர் is located in சென்னை
கொளத்தூர்
கொளத்தூர்
கொளத்தூர் is located in தமிழ் நாடு
கொளத்தூர்
கொளத்தூர்
கொளத்தூர் is located in இந்தியா
கொளத்தூர்
கொளத்தூர்
ஆள்கூறுகள்: 13°07′25.7″N 80°12′43.7″E / 13.123806°N 80.212139°E / 13.123806; 80.212139
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்
12 m (39.36 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,10,474
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600 099
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN 05 - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (வடக்கு)
அருகிலுள்ள ஊர்கள்பெரவள்ளூர், பொன்னியம்மன்மேடு, பெரம்பூர், பெரியார் நகர், அகரம், திரு.வி.க. நகர், செம்பியம், ஜவஹர் நகர், விநாயகபுரம், இலட்சுமிபுரம்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி மண்டலம்/வார்டுகள்திரு.வி.க. நகர்/64
மக்களவைத் தொகுதிவடசென்னை
சட்டமன்றத் தொகுதிகொளத்தூர்
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு.க.ஸ்டாலின்
இணையதளம்https://chennaicorporation.gov.in

அமைவு

தொகு
  • இங்கிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கி.மீ. தொலைவிலும்,
  • சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 19 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
  • சென்னைப் புறநகர் பேருந்து நிலையமான கோயம்பேடு 8 கி.மீ. தொலைவிலும்,
  • ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும்

நவீன பேருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

அருகமைந்த பகுதிகள்

தொகு

போக்குவரத்து

தொகு

அருகமைந்த இரயில் நிலையங்கள்

தொகு

நெடுஞ்சாலைகள்

தொகு

கொளத்தூரின் அருகே கல்கத்தா செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூரை தொட்டுக்கொண்டு உள் வட்டச் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக அண்ணா நகருக்கு 10 நிமிடங்களில் செல்ல முடியும்.

சேவை அலுவலகங்கள்

தொகு

அஞ்சல் துறை

தொகு

கொளத்தூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600099.

வாகனப் பதிவுத் துறை

தொகு

வாகனங்கள் பதிவுகள் மற்றும் அனுமதிக்கும் துறை அலுவலகமான 'வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்', சென்னை (வடக்கு), இரட்டை ஏரி சந்திப்பு இடத்திலிருந்து மாதவரம் நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. தொலைவிலுள்ளது.

கல்வி

தொகு

பள்ளிக்கூடங்கள்

தொகு

கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன:

  1. எவர்வின் மெட்ரிக் பள்ளி
  2. தொன் போஸ்கோ உயர்நிலைப் பள்ளி, அண்ணா சிலை
  3. சதீஷ் பாலாஜி மெட்ரிக் பள்ளி
  4. பாலாஜி மெட்ரிக் பள்ளி
  5. எவர்வின் வித்யாஷ்ரம் (சி.பி.எஸ்.இ.)
  6. அரசு உயர்நிலைப்பள்ளி

கல்லூரி

தொகு

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி

மருத்துவமனைகள்

தொகு

கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன:

  1. டி.ஆர்.ஜே. மருத்துவமனை
  2. க்ளூனி மருத்துவமனை
  3. குமரன் மருத்துவமனை
  4. மாயா நர்ஸிங் ஹோம்
  5. பி.பி. மருத்துவமனை

பொழுதுபோக்கு

தொகு

திரை அரங்குகள்

தொகு

கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட திரையரங்குகள் உள்ளன.

  • 'கங்கா', 'காவேரி' மற்றும் 'யமுனா' திரையரங்குகள்.


முன்னர் 'மூகாம்பிகை' மற்றும் 'குமரன்' திரையரங்குகள் இருந்தன. ஆனால் தற்போது, அவை இடிக்கப்பட்டு, அடுக்ககங்களாக மாற்றப்பட்டு விட்டன.

பூங்காக்கள்

தொகு
    • சக்திவேல் நகரில் அமைந்துள்ள பூங்கா
    • அஞ்சுகம் நகரில் அமைந்துள்ள பூங்கா

வர்த்தகம்

தொகு

வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனை

தொகு

கொளத்தூர், வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தெற்காசியாவின் முக்கிய பங்களிப்பு மையமாக விளங்குகிறது. இங்கிருந்து, சிங்கப்பூர் மற்றும் இன்ன பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வண்ண மீன்கள் ஏற்றுமதியாகின்றன.

அமைவிடம்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளத்தூர்_(சென்னை)&oldid=3747500" இலிருந்து மீள்விக்கப்பட்டது