பொன்னியம்மன்மேடு

சென்னை சுற்றுப் பகுதி

பொன்னியம்மன்மேடு[1] (Ponniammanmedu) இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

பொன்னியம்மன்மேடு
புறநகர்ப் பகுதி
பொன்னியம்மன்மேடு is located in சென்னை
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு is located in தமிழ் நாடு
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு (தமிழ் நாடு)
பொன்னியம்மன்மேடு is located in இந்தியா
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு
பொன்னியம்மன்மேடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°08′05.7″N 80°13′35.1″E / 13.134917°N 80.226417°E / 13.134917; 80.226417
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்31 m (102 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600110
தொலைபேசி குறியீடு044xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள் கொளத்தூர், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், திரு. வி. க. நகர், பெரவள்ளூர், செம்பியம், அகரம், ஜவஹர் நகர், பெரியார் நகர், விநாயகபுரம்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்சு. சுதர்சனம்
இணையதளம்https://chennaicorporation.gov.in

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன்மேடு நகரின் புவியியல் ஆள்கூறுகள்: 13°08'05.7"N, 80°13'35.1"E (அதாவது, 13.134910°N, 80.226406°E) ஆகும்.

போக்குவரத்து தொகு

சாலைப் போக்குவரத்து தொகு

சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா நெடுஞ்சாலை, பொன்னியம்மன்மேடு நகரை ஒட்டிச் செல்கிறது. மேலும் பெரும் வடக்கு வழித்தடம் (சாலை), பொன்னியம்மன்மேடு நகரைத் தொட்டு செல்கிறது. சென்னையின் துணை புறநகர் பேருந்து நிலையம் எனப்படும் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் பொன்னியம்மன்மேடு நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

வான்வழிப் போக்குவரத்து தொகு

இங்கிருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

கல்வி தொகு

பள்ளிகள் தொகு

டான் போஸ்கோ ஆரம்பப் பள்ளி, வெஸ்லி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இந்நகரின் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

தொழில் தொகு

பொன்னியம்மன்மேடு நகரை ஒட்டியுள்ள செம்பியம் ஹூசூர் தோட்டத்தில் அமைந்துள்ள சிம்சன் மற்றும் அதன் குழும தொழிற்சாலைகள், இந்நகர மக்களுக்கு நேரிடையாக மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மழைநீர் வடிகால் தொகு

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பொன்னியம்மன்மேடு பகுதியில் இன்னும் மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதனைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பொருட்டு, மின்மோட்டார்கள் தயாராக உள்ளன.[2]

வழிபாடு தொகு

கோயில்கள் தொகு

அதிக அளவில் பக்தர்கள் தினமும் வந்து செல்லும் பொன்னியம்மன்மேடு பகுதியிலுள்ள பிரசன்ன லெட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மூலக்கடைக்கு அருகில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னியம்மன்மேடு&oldid=3574192" இருந்து மீள்விக்கப்பட்டது