அகரம் (சென்னை)
அகரம் என்ற சென்னை, அகரம்[1] இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி.
அகரம் (சென்னை)
அகரம் (பெரம்பூர்) | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°06′41.8″N 80°13′45.8″E / 13.111611°N 80.229389°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 58 m (190 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 082 |
தொலைபேசி குறியீடு | 044xxxxxxxx |
வாகனப் பதிவு | TN 05 - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (வடக்கு) |
அருகிலுள்ள ஊர்கள் | அயனாவரம், பெரியார் நகர் (சென்னை), வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், பெரம்பூர், செம்பியம், ஜவஹர் நகர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி, திரு. வி. க. நகர் |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | வடசென்னை |
சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | கலாநிதி வீராசாமி |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | மு. க. ஸ்டாலின் |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
அமைவிடம்
தொகுஅகரம் நகரின் அமைவிடம் 13.1116°N80.2294°E.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுஅயனாவரம், வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி, பெரியார் நகர், ஜவஹர் நகர், திரு. வி. க. நகர், செம்பியம், பெரம்பூர் ஆகிய ஊர்கள் அகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
போக்குவரத்து
தொகுபேருந்து போக்குவரத்து
தொகுஅகரம் நகருக்கு அருகிலுள்ள நகரப் பேருந்து நிலையங்கள்: பெரியார் நகர் மாநகரப் பேருந்து நிலையம் மற்றும் திரு. வி. க. நகர் மாநகரப் பேருந்து நிலையம். சென்னை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சென்று வர, மாநகரப் பேருந்து சேவைகள் மிக உதவிகரமாக உள்ளன.
தொடருந்து போக்குவரத்து
தொகுபெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம், பெரம்பூர் லோகோ வொரக்ஸ் தொடருந்து நிலையம், வில்லிவாக்கம் தொடருந்து நிலையம், பெரம்பூர் தொடருந்து நிலையம் ஆகிய மேற்குறிப்பிட்ட தொடருந்து நிலையங்கள் மூலம் இவ்வூர் மக்கள் பயன் பெறுகின்றனர்.
முக்கிய சாலைகள்
தொகுசுந்தரராஜ பெருமாள் கோயில் (தெற்கு) சாலை, தான்தோன்றி அம்மன் கோயில் சாலை, (பாலவாயல் தெரு) Palavayal road[2], லோகோ வொர்க்ஸ் சாலை, ஜவஹர் நகர் பிரதான சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பேடன் பவுல் சாலை, சிதம்பரம் தெரு, பல்லார்டு தெரு முதலியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க சாலைகள்.
கல்வி
தொகுபள்ளிக்கூடங்கள்
தொகுஅகரம் ஊரில் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் சில உள்ளன.
மருத்துவ வசதி
தொகுஅகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சில தனியார் மருத்துவமனைகள், இங்கு சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
தொழில்கள்
தொகுஅகரம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள, பெரம்பூர் 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை' மூலம் இவ்வூர் மக்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர மற்றும் தற்காலிக வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அகரம் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 'Tafe' tractors மற்றும் விவசாயக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், Simpson and Company, Bimetal bearings, Addison Paints and Chemicals தயாரிப்பு தொழிற்சாலை, India Pistons என்ற என்ஜின் பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை என தொழிற்சாலைகள், அகரம் நகர மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஏற்பட சில காரணிகள்.
பொழுதுபோக்கு
தொகுபூங்கா
தொகு'ஆனந்தன் பூங்கா' என்ற பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது.
விளையாட்டு மைதானம்
தொகு'ஆனந்தன் விளையாட்டுத் திடல்' என்ற பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் ஒன்றும் உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
தொகுஅகரம், தன்னகத்தே கொண்டுள்ள இந்துக் கோயில்கள்: அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில், அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில், அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், அருள்மிகு இலட்சுமி அம்மன் திருக்கோயில், அருள்மிகு பிரசன்ன சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், அருள்மிகு தான்தோன்றி அம்மன் திருக்கோயில், அருள்மிகு சாய்பாபா திருக்கோயில், அருள்மிகு இராதா ருக்மணி சமேத அருள்மிகு கண்ணபிரான் திருக்கோயில். மேலும், கிறித்தவ ஆலயங்கள், முஸ்லீம் பள்ளிவாசல்கள் என மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுத் தலங்கள் உள்ள ஊர் அகரம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Periya purana ayvurai : Critical Study of the Periyapuranam, 12th century Tamil Shaivite hagiograph by Cekkilar. Vol. 4. Maraimalaiyatikal Patippakam. 1976.
- ↑ Madras (India : State) (1964). Fort Saint George Gazette, Madras District Gazetteers (in ஆங்கிலம்). Superintendent, Government Press, 1908. p. 8.
{{cite book}}
: Text "volume 1" ignored (help)