சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டமிடும் முகாமையாகும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் புதிய வரைவுத்திட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிப் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

வரலாறுதொகு

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் 1972 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1974 - ஆம் ஆண்டு, "1971 தமிழ்நாடு நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல்" மசோதாவின் படி இன்றியமையா நிறுவனம் என்ற தகுதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது.

உறுப்பினர்கள்தொகு

எண் உறுப்பினர் மாண்பு பொறுப்பு உறுப்பினர் எண்ணிக்கை
1 அமைச்சர் - தகவல் துறை தலைவர் 1
2 துணை தலைவர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் துணை தலைவர் 2
3 உறுப்பினர் - செயலர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உறுப்பினர் 1
4 அரசு செயலர், வீட்டு வசதித்துறை உறுப்பினர் 1
5 அரசு செயலர், நிதித்துறை உறுப்பினர் 1
6 அரசு செயலர், தொழில் துறை உறுப்பினர் 1
7 அரசு செயலர், போக்குவரத்து துறை உறுப்பினர் 1
8 ஆணையர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் 1
9 மேலாண் இயக்குனர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உறுப்பினர் 1
10 இயக்குனர், நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவு உறுப்பினர் 1
11 தலைமை நகர திட்டவினைஞர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உறுப்பினர் 1
12 தலைமை பொறியாளர், நெடுஞ்சாலை மற்றும் ஊரகப்பனித்துறை உறுப்பினர் 1
13 அரசு தலைமை கட்டிடக்கலைஞர் உறுப்பினர் 1
14 இணை இயக்குனர், நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவு உறுப்பினர் 1
15 தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உறுப்பினர் 1
16 தலைவர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உறுப்பினர் 1
17 சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டபேரவை உறுப்பினர் 2
18 சென்னை பெருநகர் பரப்பின் நகராட்சி மன்ற உறுப்பினர் உறுப்பினர் 4
19 உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சிறப்பு அழைப்பாளர் 1

குழுமத்தின் செயல்பாடுகள்தொகு

1) சென்னை பெருநகர் பரப்பின் பகுதிகளில் களப்பணியாற்றி, அதன் அடிப்படையில் அறிக்கைகள் அளித்தல்.
2) சென்னை பெருநகர் பரப்பிற்கு வரைவு திட்டம் ஆயத்தம் செய்தல்; விரிவான கட்டமைப்பு திட்டம் ஆயத்தம் செய்தல்; புதிய நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல்.
3) செயல்பாட்டில் இருக்கும் அண்மைய நிலப்பயன்பாட்டு வரைபடத்தை தயாரித்தல்; புதிய திட்டங்களுக்காக தேவைப்படுகின்ற வரைபடங்களை ஆயத்தம் செய்தல்.
4) புதிய திட்டப்பணிகளை விரைந்து முடித்தல்
5) சென்னை பெருநகர பரப்பின் பகுதிகளில் ஒரு பிரிவு அல்லது முழுமையான பரப்பளவை புதிய நகர் என்று தீர்மானித்து கீழ்கண்ட செயல்பாடுகளை செய்தல்.
- குறிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நகர் படைப்பதர்க்கான வரைவை தயாரித்தல்
- குறிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நகர் உருவாவது புதிய நகர திட்டமிடலின் படி அமைக்கப்படுவதை வரையறை செய்தல்.

குழுமத்தால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்தொகு

(1) சென்னை புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு
(2) கோயம்பேடு வணிக வளாகம்
(3) வெளி வட்ட சாலை

வெளி இணைப்புகள்தொகு