குறுவட்டம்
குறு வட்டம் அல்லது உள் வட்டம் அல்லது பிர்கா (ஆங்கிலம்: FIRKA) என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி குறு வட்ங்கள் அமைக்கப்படுகின்றன.[1][2] வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக [[மண்டல துணை வட்டாட்சியர்] இருப்பார். இவர் பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் வழியாகவும் நியமிக்கப்படுகிறார்.
பணிகள்
தொகு- வருவாய் வட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர், வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், பரிந்துரைகளின்படி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.
- மாவட்ட அளவில், வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க நியமிக்கப்படும் மேல் அலுவலருக்கு உதவி செய்வதும், அதுகுறித்த தகவல்கள், அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.
- மாவட்ட ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள கிராமநிருவாக அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
நில அளவை
தொகுசில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி குறுவட்டங்கள் அமைக்கப்படுகின்றன. வருவாய் குறுவட்ட நில அளவைத் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக குறுவட்ட அளவர் இருப்பார். இவரால் நில அளவை குறித்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து நில அளவைப் பணிகளையும் செய்து வரைபடம் தயாரித்து, அறிக்கையுடன் வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பணிகள்
தொகு- வருவாய் வட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர், வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளின் இடத்தணிக்கைக்கு உதவுவார். அவசியமேற்பட்டால் வரைபடம் தயாரித்து வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
- ஒவ்வொரு வருவாய் கிராமத்திலுள்ள நில உடைமையாளர்கள் பெற்ற கிரைய ஆவணத்தின் அடிப்படையிலும், உரிய வரைபடம் தயாரித்து அறிக்கைகளுடன் பட்டா மாறுதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- அரசு சார்ந்த நில பரிவர்த்தனை, நில எடுப்பு, நில ஒப்படை போன்ற பணிகளை செய்து வரைபடத்துடன் அறிக்கையை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17. ஏப்ரல் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.