கோயம்பேடு
கோயம்பேடு சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு மிகப்பெரிய காய்கறிச் சந்தையும் உள்ளது.[1][2][3]
கோயம்பேடு | |
— அருகில் உள்ளது — | |
அமைவிடம்: கோயம்பேடு, சென்னை , இந்தியா
| |
ஆள்கூறு | 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோயம்பேடு பெயர் காரணமும் வரலாறும்
தொகுகோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம் ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என மருவியதாம்.
லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான். வால்மீகி முனிவர் இருந்த ஆஸ்ரமம்தான் தற்போது சென்னையில் இருக்கும் கோயம்பேடு எனும் இடம். இந்த இடத்தில்தான் லவன், குசன் இருவரும் ஈஸ்வரன் கோயில் ஒன்றைக் கட்டினர்
இங்கு இருக்கும் சிவனுக்குக் குறுங்காலீஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். லவ, குசர் பூஜை செய்த லிங்கம் நாளடைவில் மணலில் அமிழ்ந்து போயிற்று. பிற்காலத்தில் சோழ மன்னன் அந்தப் பக்கம் தேரில் வர, தேரின் சக்கரம் மணலை அழுத்த, மணலில் புதைந்திருந்த லிங்கத்திலிருந்து இரத்தம் பெருக்கிட்டது. மன்னர் இதைப் பார்த்துப் பயந்து கீழே இறங்கி அந்த லிங்கத்தை எடுத்தார். தன்னால் அந்தச் சிவலிங்கத்திற்கு இப்படியாகி விட்டதே என்று மனம் வருந்தினார். பின் அதற்கு ஒரு கோயிலும் கட்டினார். லிங்கம் தேரின் சக்கரம் பட்டு நசுங்கியதால் குறுகிக் குள்ளமானது. இதனால் பெயரும் குறுங்காலீஸ்வரர் ஆனது.
அமைவிடம்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Koyambedu to get third sewage treatment plant
- ↑ Dorairaj, S. (28 December 2005). "Koyambedu bus terminus gets ISO certification". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930180616/http://www.thehindu.com/2005/12/28/stories/2005122816740400.htm.
- ↑ "Jayalalithaa inaugurates new bus terminus in Chennai". The Hindu Business Line. 19 November 2002. https://www.thehindubusinessline.com/2002/11/19/stories/2002111901991700.htm.