தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[1][2]
தமிழ்நாட்டு முதலமைச்சர் | |
---|---|
பதவி | அரசுத் தலைவர் |
உறுப்பினர் | |
அறிக்கைகள் | |
வாழுமிடம் | எண். 9, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு-600 028. |
நியமிப்பவர் | தமிழக ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
உருவாக்கம் | 17 திசம்பர் 1920 |
இணையதளம் | www |
முதலமைச்சர் ஆட்சி முறைகள்
- தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
- இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது சட்டமன்ற தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார்.
- முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார். ஆண்டு நிதி அறிக்கையை கால எல்லைக்குள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றா விட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். சட்டமன்ற உறுப்பினராய் இல்லாதவர் முதல்வர் ஆகினால், அவர் அடுத்த 6 மாதத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இல்லையேல், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
- முதல்வர் இரண்டு ஆண்டுகளுக்கு மிகும் சிறை தண்டனை பெற்றால், பதவி விலக வேண்டும். தமிழக சட்டமன்ற தொகுதியான 234 தொகுதியில் 117க்கு குறையாத சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆக இருக்கமுடியும். மேலும் 117 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்தால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அக்கட்சிக்கு மற்றகட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் போனாலும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க நேரிடும்.
- மேலும் தமிழக ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் வன்முறை செயல்கள், சட்டமன்றத்தில் சட்டமன்ற அமைச்சர்களிடையே ஏற்படும் அத்து மீறல்கள்களை மீறிய அசம்பாவித சம்பவங்கள், ஆளும் ஆட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நாட்டின் பிரதமர், முதலமைச்சர் பதவியில் உள்ளவர்களின் உடல்நல குறைவால் நீண்ட நாள் சிகிச்சையோ அல்லது துன்பியல் படுகொலையோ, இயற்கை மரணமோ ஏற்பட்டாலும். இந்திய அரசியலமைப்பு பிரிவு 356 (Article 356) சட்டத்தை பயன்படுத்தி தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நேரடியாக இந்திய சனாதிபதி (குடியரசு தலைவர்) தமிழக முதல்வரையும் அவர் மந்திரிசபையோடு சேர்த்து பதவி நீக்கம் செய்து ஆட்சியை கலைப்பதற்கு அதிகாரம் உண்டு.
- இச்சட்டம் 1994க்கு பின் சனாதிபதியின் இந்த அதிகாரம் பயன்படுத்தபடுவது மிகவும் முக்கியமான கட்டமைப்புக்குள் வந்துள்ளது.
- இவரே தமிழக அரசின் முழு தலைவர். இவரின் பரிந்துரைப்படியே ஆளுநர், மாநில அமைச்சரவையை நிர்மாணிப்பார். தமிழக அமைச்சரவை மாற்றங்களை முதல்வரின் பரிந்துரைப்படியே ஆளுநர் செய்ய முடியும். இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில், 1967க்கு பின், முதல்வர் தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசாணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்து நிர்வாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
- இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.
சென்னை மாகாண முதல்வர்களின் பட்டியல்
சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம்[3] 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Legislative council)[4], எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.[5] 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[6]
வ. எண் | உருவப்படம் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | அரசியல் கட்சி[a] | பதவிக் காலம் | நியமித்தவர் | சட்டமன்றத் தேர்தல் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | ஆட்சி[b] | |||||||
1 | ஏ. சுப்பராயலு (1855–1921) |
மதராசு மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 17 திசம்பர் 1920 | 11 சூலை 1921[RES] | 1ஆவது (206 நாட்கள்) |
பிரடெரிக் தேசிகெர் | 1ஆவது | |
2 | பனகல் ராஜா (1866–1928) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 11 சூலை 1921 | 11 செப்டம்பர் 1923 | 1ஆவது (792 நாட்கள்) |
ரீடிங் பிரபு | ||
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 19 நவம்பர் 1923 | 3 திசம்பர் 1926 | 2ஆவது (1,111 நாட்கள்) |
2ஆவது | ||||
3 | பி. சுப்பராயன் (1889–1962) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | சுயேட்சை | 4 திசம்பர் 1926 | 27 அக்டோபர் 1930 | 1ஆவது (1,423 நாட்கள்) |
இர்வின் பிரபு | 3ஆவது | |
4 | பி. முனுசுவாமி நாயுடு (1885–1935) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 27 அக்டோபர் 1930 | 4 நவம்பர் 1932[RES] | 1ஆவது (740 நாட்கள்) |
இர்வின் பிரபு | 4ஆவது | |
5 | ராமகிருஷ்ண ரங்காராவ் (1901–1978) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 5 நவம்பர் 1932 | 5 நவம்பர் 1934 | 1ஆவது (730 நாட்கள்) |
வெல்லிங்டன் பிரபு | ||
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 5 நவம்பர்1934 | 4 ஏப்ரல் 1936[RES] | 1ஆவது (516 நாட்கள்) |
5ஆவது | ||||
6 | பி. டி. இராஜன் (1892–1974) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 4 ஏப்ரல் 1936 | 24 ஆகத்து 1936[RES] | 1ஆவது (142 நாட்கள்) | |||
(5) | ராமகிருஷ்ண ரங்காராவ் (1901–1978) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 24 ஆகத்து1936 | 1 ஏப்ரல் 1937 | 3ஆவது (220 நாட்கள்) |
விக்டர் ஹோப் | ||
7 | கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (1875–1942) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | சுயேட்சை[c][7][8][9] | 1 ஏப்ரல் 1937 | 14 சூலை 1937[RES] | 1ஆவது (104 நாட்கள்) |
1ஆவது | ||
8 | சி. இராஜகோபாலாச்சாரி (1878–1972) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 14 சூலை 1937 | 29 அக்டோபர் 1939[RES] | 1ஆவது (837 நாட்கள்) | |||
– | ஆளுநர் ஆட்சி[10] | பொ/இ | 29 அக்டோபர் 1939 | 30 ஏப்ரல் 1946 | (2,375 நாட்கள்) | ||||
9 | த. பிரகாசம் (1872–1957) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 30 ஏப்ரல் 1946 | 23 மார்ச் 1947[RES] | 1ஆவது (327 நாட்கள்) |
ஆர்ச்சிபால்ட் வேவல் | 2ஆவது | |
10 | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1895–1970) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 23 மார்ச் 1947 | 6 ஏப்ரல் 1949[RES] | 1ஆவது (745 நாட்கள்) |
ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை | ||
11 | பூ. ச. குமாரசுவாமி ராஜா (1898–1957) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 6 ஏப்ரல் 1949 | 26 ஜனவரி 1950 | 1ஆவது | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
- குறிப்பு
சென்னை மாநில முதல்வர்களின் பட்டியல்
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.[11] சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ன் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.[3]
- முதலமைச்சர்களின் கட்சியின் வண்ணக் குறிப்பு
- குறிப்பு
வ. எண் | உருவப்படம் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | அரசியல் கட்சி[a] | பதவிக் காலம் | நியமித்தவர் | சட்டமன்றத் தேர்தல் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | ஆட்சி[b] | |||||||
1 | பூ. ச. குமாரசுவாமி ராஜா (1898–1957) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 26 ஜனவரி 1950 | 10 ஏப்ரல் 1952 | 1வது | கிருஷ்ண குமாரசிங் பவசிங் | 2ஆவது | |
2 | சி. இராஜகோபாலாச்சாரி (1878–1972) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 10 ஏப்ரல் 1952 | 13 ஏப்ரல் 1954[RES] | 2ஆவது (733 நாட்கள்) |
சிறீ பிரகாசா | 1ஆவது | |
3 | காமராசர் (1903–1975) |
குடியாத்தம் | இந்திய தேசிய காங்கிரசு | 13 ஏப்ரல் 1954 | 31 மார்ச் 1957 | 1ஆவது (1,083 நாட்கள்) |
சிறீ பிரகாசா | ||
சாத்தூர் | 13 ஏப்ரல் 1957 | 1 மார்ச் 1962 | 2ஆவது (1,783 நாட்கள்) |
ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் | 2ஆவது | ||||
15 மார்ச் 1962 | 2 அக்டோபர் 1963[RES] | 3ஆவது (566 நாட்கள்) |
விஷ்ணுராம் மேதி | 3ஆவது | |||||
4 | எம். பக்தவத்சலம் (1897–1987) |
திருப்பெரும்புதூர் | இந்திய தேசிய காங்கிரசு | 2 அக்டோபர் 1963 | 28 பிப்ரவரி 1967 | 1ஆவது (1245 நாட்கள்) |
விஷ்ணுராம் மேதி | ||
5 | சி. என். அண்ணாத்துரை (1909–1969) |
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | திராவிட முன்னேற்றக் கழகம் | 6 மார்ச் 1967 | 13 சனவரி 1969 | 1ஆவது (680 நாட்கள்) |
சர்தார் உஜ்ஜல் சிங் | 4ஆவது |
தமிழக முதல்வர்களின் பட்டியல்
சென்னை மாகாணம் 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[12] தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.[4]
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர் மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[13] முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.
|
|
புள்ளிவிவரம்
- கட்சி வாரியாக முதலமைச்சர்களின் எண்ணிக்கை பட்டியல்
வ. எண் | பெயர் | கட்சி | பதவிக் காலம் | |
---|---|---|---|---|
அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்த காலம் | பதவியில் இருந்த மொத்த நாட்கள் | |||
1 | மு. கருணாநிதி | திமுக | 6 ஆண்டுகள், 355 நாட்கள் | 18 ஆண்டுகள், 360 நாட்கள் |
2 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 4 ஆண்டுகள், 323 நாட்கள் | 14 ஆண்டுகள், 124 நாட்கள் |
3 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 7 ஆண்டுகள், 198 நாட்கள் | 10 ஆண்டுகள், 65 நாட்கள் |
4 | கே. காமராஜ் | காங்கிரசு | 9 ஆண்டுகள், 172 நாட்கள் | 9 ஆண்டுகள், 172 நாட்கள் |
5 | எடப்பாடி கே. பழனிசாமி | அதிமுக | 4 ஆண்டுகள், 79 நாட்கள் | 4 ஆண்டுகள், 79 நாட்கள் |
6 | எம். பக்தவத்சலம் | காங்கிரசு | 3 ஆண்டுகள், 154 நாட்கள் | 3 ஆண்டுகள், 154 நாட்கள் |
7 | சி. இராஜகோபாலாச்சாரி | காங்கிரசு | 2 ஆண்டுகள், 3 நாட்கள் | 2 ஆண்டுகள், 3 நாட்கள் |
8 | சி. என். அண்ணாத்துரை | திமுக | 1 ஆண்டு, 334 நாட்கள் | 1 ஆண்டு, 334 நாட்கள் |
9 | மு. க. ஸ்டாலின் | திமுக | 3 ஆண்டுகள், 229 நாட்கள் | 3 ஆண்டுகள், 229 நாட்கள் |
10 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 237 நாட்கள் | 1 ஆண்டு, 106 நாட்கள் |
11 | ஜானகி இராமச்சந்திரன் | அதிமுக | 23 நாட்கள் | 23 நாட்கள் |
தற்காலிக முதல்வர் | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக/திமுக | 14 நாட்கள் | 21 நாட்கள் |
- கட்சி வாரியாக பட்டியல்
வ. எண் | அரசியல் கட்சி | முதலமைச்சர்களின் எண்ணிக்கை | முதல்வர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள் |
---|---|---|---|
1 | அதிமுக | 5+1 தற்காலிகம் | 11004 நாட்கள் |
2 | திமுக | 3+1 தற்காலிகம் | 8965 நாட்கள் |
3 | காங்கிரசு | 3 | 5442 நாட்கள் |
- கட்சி வாரியாக முதலமைச்சர்களின் எண்ணிக்கை
- கட்சி வாரியாக முதல்வர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள்
தற்போது வாழும் முன்னாள் முதல்வர்கள்
22 திசம்பர் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் இருவர் வாழுகின்றனர்:
-
எடப்பாடி கே. பழனிசாமி (2017 - 2021)
12 மே 1954 -
ஓ. பன்னீர்செல்வம் (2001 - 2002, 2014 - 2015, 2016 - 2017)
14 சனவரி 1951
குறிப்பிடத்தக்க பதிவுகள்
- மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். பதவியிலிருந்த காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள் (30 சூன், 1977 முதல் அவர் இறந்த நாளான 24 திசம்பர், 1987 வரை.)
- மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் வி. என். ஜானகி (சனவரி 17, 1988 முதல் சனவரி 30, 1988 வரை.)
- அதிக முறை (6) பொறுப்பேற்ற முதல்வர் ஜெ. ஜெயலலிதா.
- 24 சூன், 1991–12 மே, 1996,
- 14 மே, 2001–21 செப்டம்பர், 2001,
- 2 மார்ச், 2002–12 மே, 2006,
- 16 மே, 2011–27 செப்டம்பர், 2014,
- 23 மே, 2015 - 23 மே, 2016
- 23 மே, 2016– 5 திசம்பர், 2016
- அதிக ஆண்டுகள் (18 வருடங்கள்) முதல்வர் மு. கருணாநிதி.
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 இந்த பத்தியில் முதல்வரின் கட்சி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; இவை இங்கே பட்டியலிடப்படவில்லை.
- ↑ 2.0 2.1 2.2 தொடர்புடைய காலத்தில் குறிப்பிடப்பட்ட நபரின் ஆட்சி வரிசை எண்
- ↑ தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அமைச்சரவை மீது ஆளுநரின் அதிகாரம் பிடிக்காததால், ஆட்சி அமைக்க மறுத்தது. மெட்ராஸ் கவர்னர் எர்ஸ்கின் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அல்லாத மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தார். சீனிவாச சாஸ்திரிக்கு முதலில் இடைக்கால அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியை வழங்கினார் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார். இறுதியில் 1 ஏப்ரல் 1937 இல் குர்மா வெங்கட ரெட்டி நாயுடுவின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அது சூலை வரை நீடித்தது. பிறகு காங்கிரஸ் வைஸ்ராய் லின்லித்கோ உறுதிமொழியை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்தது
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு அரசு (Government of Tamil Nadu) — தமிழக முதலமைச்சர்கள் (Chief Ministers of Tamil Nadu since 1920)
- ↑ "Government of Tamil Nadu — Assemblies — An Overview". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-05-30.
- ↑ 3.0 3.1 தமிழ் நாடு அரசு — தலைமைச் செயலகம் — சுருக்கமான வரலாறு
- ↑ 4.0 4.1 "Legislative bodies of India - Tamil Nadu Legislative Assembly". Archived from the original on 2010-01-02. பார்க்கப்பட்ட நாள் 2006-08-17.
- ↑ The Telegraph - Own Goal - Partition became inevitable once the Congress resigned in 1939
- ↑ Pakistan - toward partition
- ↑ Ramanathan, K. V. (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1. Pearson Education India. pp. 301–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131714881.
- ↑ Menon, Visalakshi (2003). From movement to government: the Congress in the United Provinces, 1937-42. Sage. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761996200.
- ↑ Nagarajan, Krishnaswami (1989). Dr. Rajah Sir Muthiah Chettiar: a biography. Annamalai University. pp. 63–70.
- ↑ பிரித்தானியாவின் இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள காங்கிரஸ் அமைச்சகங்கள் 1939 அக்டோபர் 29 அன்று ஜெர்மனிக்கு எதிரான வைஸ்ராயின் போர் அறிவிப்பை எதிர்த்து இராஜினாமா செய்தன. அடுத்த தேர்தல்கள் மார்ச் 1946 இல் நடைபெறும் வரை சென்னை மாகாணம் "ஆளுநரின் நேரடி ஆட்சியின்" கீழ் இருந்தது.(India (Failure of Constitutional Machinery) HC Deb 16 April 1946 vol 421 cc2586-92)
- ↑ "தமிழ்நாடு அரசு — மாநில சட்டப் பேரவை — துவக்கமும், படிமலர்ச்சியும்". Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2009-07-20.
- ↑ "Indian states since 1947". World Statesmen.
- ↑ "The Hindu - Delhi's warning". Archived from the original on 2006-06-20. பார்க்கப்பட்ட நாள் 2009-07-20.
- ↑ "DMK, AIADMK pay homage to Annadurai". Archived from the original on 4 March 2005.
... the leader's life was cut short by cancer 3 February 1969.
- ↑ 15.0 15.1 On 21 September 2001, a five-judge constitutional bench of the Supreme Court of India ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as chief minister there has been a clear infringement of a constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as chief minister was declared null and invalid with retrospective effect. Therefore, technically, she was not the chief minister in the period between 14 May 2001 and 21 September 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CM பரணிடப்பட்டது 28 நவம்பர் 2004 at the வந்தவழி இயந்திரம், Full text of the judgment from official Supreme Court site பரணிடப்பட்டது 27 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம்).
- ↑ "The Hindu - Karunanidhi resigns". Archived from the original on 16 May 2011. பார்க்கப்பட்ட நாள் 16 May 2011.
- ↑ BBC News - New leader for Tamil Nadu state
- ↑ "Jayalalithaa begins third term as Chief Minister today". NDTV. 16 May 2011. http://www.ndtv.com/article/assembly%20polls/jayalalithaa-begins-third-term-as-chief-minister-today-105969.
- ↑ Jayalalithaa's trusted aide Panneerselvam sworn as Tamil Nadu's new chief minister
- ↑ O Panneerselvam resigns from Chief Minister post
- ↑ "Jayalalitha sworn in as chief minister of Tamil Nadu". BBC News. 23 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
- ↑ PTI. "AIADMK comes to power again; Jayalalitha bucks tradition". The Financial Express. Archived from the original on 20 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
- ↑ "Jayalalithaa no more: O Panneerselvam sworn in as the new Tamil Nadu CM". The Financial Express. 5 December 2016. http://www.financialexpress.com/india-news/jayalalithaa-critical-o-panneerselvam-likely-to-succeed-as-tamil-nadu-cm-all-you-need-to-know-about-him/464933/.
- ↑ "O Panneerselvam resigns as Chief Minister of Tamil Nadu, cites personal reasons" (in en). The Indian Express. 5 February 2017. http://indianexpress.com/article/india/panneerselvam-resigns-as-chief-minister-of-tamil-nadu-cites-personal-reasons/.
- ↑ T. Ramakrishnan. "Edappadi Palaniswami sworn in as Tamil Nadu Chief Minister". The Hindu. 17 February 2017.
- ↑ "MK Stalin, DMK Chief, Takes Oath As Tamil Nadu Chief Minister". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.