சக்ரவர்த்தி ரங்கராஜன்

இந்திய அரசியல்வாதி

முனைவர். சக்ரவர்த்தி ரங்கராஜன் (C. Rangarajan) (பிறப்பு 1932),பரவலாக சி. இரங்கராஜன், என்பவர் புகழ் பெற்ற இந்தியாவின் பொருளியல் வல்லுனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில ஆளுனரரும், பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுனருமாவார். தற்போது இந்திய பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுவின் தலைவராக இருக்கிறார். இது தவிர, இவர் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் தலைவராகவும், "'சி. ஆர் ராவ் கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான உயர்நிலைக் கழகத்தின்" நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

சக்ரவர்த்தி ரங்கராஜன்
பிறப்பு5 சனவரி 1932 (அகவை 92)
படித்த இடங்கள்
பணிபொருளியலாளர்கள்
வேலை வழங்குபவர்
கையெழுத்து

பணிவாழ்வு தொகு

சென்னை பல்கலைக்கழகத்தில் வர்த்தகவியல் படித்த இரங்கராஜன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 1964ஆம் ஆண்டு பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அகமதாபாத், இந்திய மேலாண்மைக் கழகம் போன்ற பல கல்வி நிலையங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு அகமதாபாத், இந்திய மேலாண்மைக் கழகம், இவருக்கு கௌரவ சகா பட்டத்தை அளித்தது.

1982ஆம் ஆண்டு முதல் 1991 வரை பாரத ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராகவும் பின்னர் திசம்பர் 22,1992 முதல் திசம்பர் 21, 1997 வரை அதன் ஆளுனராகவும் பணியாற்றினார்.

24 நவம்பர் 1997 முதல் 3 சனவரி 2003 வரை ஆந்திர ஆளுனராகப் பொறுப்பாற்றியிருக்கிறார். அதன் முடிவில் பனிரெண்டாவது நிதி ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்..

2005 முதல், இந்தியப் பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுத் தலைவராக இருந்து வந்தார். ஆகத்து 2008 அன்று பதவி விலகி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.[1] ஆகத்து 2009இல் தமது நாடாளுமன்ற அங்கத்தைத் துறந்து மீண்டும் பிரதமரின் பொருளியல் அறிவுரைக்குழுவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஆந்திரப் பிரதேச ஆளுனராக இருந்த நேரத்தில் 1998 முதல் 1999 வரை ஒரிசா மாநில ஆளுனராகவும் 2001 முதல் 2002 வரை தமிழ்நாடு மாநில ஆளுனராகவும் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

விருதுகள் தொகு

2002ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம விபூசண் வழங்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. "List of Governors". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 2006-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரவர்த்தி_ரங்கராஜன்&oldid=3537556" இலிருந்து மீள்விக்கப்பட்டது