தமிழ்நாடு அமைச்சரவை

முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும்
(தமிழக அமைச்சரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார். அதன்படி குழுவின் தலைவருக்கு முதலமைச்சர் பதவி ஏற்பும் இரகசியம் (கமுக்கம்) காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் துறைகள் வாரியாக அமைச்சர்களாகவும், ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப் பெற்றதற்குப் பின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் இணைந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள்.

தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவை

தொகு
வ. எண். பெயர் தொகுதி பொறுப்பு துறைகள் கட்சி
முதலமைச்சர்
1. மு. க. ஸ்டாலின் கொளத்தூர் முதலமைச்சர்
  • பொது
  • பொது நிர்வாகம்
  • இந்திய ஆட்சிப்பணி
  • இந்திய காவல் பணி
  • அகில இந்திய பணி
  • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
  • காவல்
  • உள்துறை
  • சிறப்பு முயற்சி
  • மாற்றுத் திறனாளிகள் நலன்
திமுக
துணை முதலமைச்சர்
2. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி துணை முதலமைச்சர்

சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறைஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

திமுக
அமைச்சர்கள்
3. துரைமுருகன் காட்பாடி நீர்வளத் துறை
  • சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம்
  • மாநில சட்டமன்றம்
  • ஆளுநர் மற்றும் அமைச்சரவை
  • தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
  • கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
திமுக
4. கே. என். நேரு திருச்சி மேற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் துறை
  • நகராட்சி நிர்வாகம்
  • நகர்ப்பகுதி
  • குடிநீர் வழங்கல்
திமுக
5. இ. பெரியசாமி ஆத்தூர் (திண்டுக்கல்) ஊரக வளர்ச்சித் துறை திமுக
6. க. பொன்முடி திருக்கோயிலூர் வனத் துறை அமைச்சர்
  • வனம்
திமுக
7. எ. வ. வேலு திருவண்ணாமலை பொதுப்பணித் துறை அமைச்சர்
  • பொதுப்பணிகள்
  • கட்டிடங்கள்
  • நெடுஞ்சாலைகள்
  • சிறு துறைமுகங்கள்
திமுக
8. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி வேளாண்மை-உழவர் நலத்துறை
  • வேளாண்மை
  • வேளாண்மை பொறியியல்
  • வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
  • தோட்டக்கலை
  • கரும்புத்தீர்வை
  • கரும்புப் பயிர் மேம்பாடு
  • தரிசு நில மேம்பாடு
திமுக
9. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
  • வருவாய்
  • மாவட்ட வருவாய் நிர்வாகம்
  • துணை ஆட்சியர்கள்
  • பேரிடர் மேலாண்மை
திமுக
10. தங்கம் தென்னரசு திருச்சுழி நிதித் துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திமுக
11. வே. செந்தில்பாலாஜி கரூர் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்
  • மின்சாரம்
  • கலால்
  • ஆயத்தீர்வை
திமுக
12. எஸ். ரகுபதி திருமயம் சட்டத் துறை அமைச்சர்
  • சட்டம்
  • நீதிமன்றங்கள்
  • சிறைச்சாலை
  • ஊழல் தடுப்புச் சட்டம்
திமுக
13. சு. முத்துசாமி ஈரோடு மேற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
  • வீட்டு வசதி
  • ஊரக வீட்டு வசதி
  • நகரமைப்புத் திட்டமிடல்
  • வீட்டு வசதி மேம்பாடு
  • இடவசதி கட்டுப்பாடு
  • நகரத் திட்டமிடல்
  • நகர் பகுதி வளர்ச்சி
  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
திமுக
14. கே. ஆர். பெரியகருப்பன் திருப்பத்தூர் (சிவகங்கை) கூட்டுறவுத்துறை
  • கூட்றவுச் சங்கங்கள்
திமுக
15. தா. மோ. அன்பரசன் ஆலந்தூர் ஊரகத் தொழில்துறை அமைச்சர்
  • ஊரகத் தொழில்கள்
  • குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள்
  • குடிசை மாற்று வாரியம்
திமுக
16. எம். பி. சாமிநாதன் காங்கேயம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
  • செய்தி மற்றும் விளம்பரம்
  • திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
  • பத்திரிகை
  • அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
  • அரசு அச்சகம்
  • தமிழ் ஆட்சி மொழி
  • தமிழ் பண்பாட்டுத்துறை
  • தொல்பொருள்
திமுக
17. பெ. கீதா ஜீவன் தூத்துக்குடி சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
  • ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
  • இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
திமுக
18. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை
  • மீன்வளம்
  • மீன் வளர்ச்சிக் கழகம்
  • கால்நடை பராமரிப்பு
திமுக
19. ஆர். எஸ். இராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் பால்வள மேம்பாட்டுத் துறை காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர்
  • பால்வள மேம்பாட்டுத் துறை
திமுக
20. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் சேலம் வடக்கு சுற்றுலாத்துறை
  • சுற்றுலா
  • தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
திமுக
21. அர. சக்கரபாணி ஒட்டன்சத்திரம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
  • உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்
  • நுகர்வோர் பாதுகாப்பு
  • விலைக்கட்டுப்பாடு
திமுக
22. ஆர். காந்தி ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
  • கைத்தறி மற்றும் துணிநூல்
  • கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்
  • பூதானம் மற்றும் கிராம தானம்
திமுக
23. மா. சுப்பிரமணியம் சைதாப்பேட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
  • மக்கள் நல்வாழ்வு
  • மருத்துவக் கல்வி
  • குடும்ப நலன்
திமுக
24. பி. மூர்த்தி மதுரை கிழக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
  • வணிகவரி
  • பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம்
  • எடைகள் மற்றும் அளவைப்கள்
  • கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
  • சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
திமுக
25. எஸ். எஸ். சிவசங்கர் குன்னம் போக்குவரத்துத் துறை அமைச்சர்
  • போக்குவரத்து
  • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து
  • இயக்கூர்தி சட்டம்
திமுக
26. பி. கே. சேகர் பாபு துறைமுகம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை
  • இந்து சமயம்
  • அறநிலையங்கள்
  • சென்னை மெட்ரோ குழுமம்
திமுக
27. பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்தி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
திமுக
28. டி. ஆர். பி. ராஜா மன்னார்குடி தொகுதி தொழில் துறை அமைச்சர்
  • தொழில் துறை
திமுக
29. ஆவடி நாசர் ஆவடி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
  • சிறுபான்மையினர் நலன்
  • வெளிநாடு வாழ் தமிழர் நலன்
  • அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள்
  • வக்பு வாரியம்
திமுக
30. அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பள்ளிக் கல்வித் துறை
  • பள்ளிக்கல்வி
திமுக
31. சிவ. வீ. மெய்யநாதன் ஆலங்குடி பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  • பிற்பட்டோர் நலம்
திமுக
32. சி. வி. கணேசன் திட்டக்குடி தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • தொழிலாளர் நலன்
  • மக்கள் தொகை
  • வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு
  • நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
திமுக
33. கோவி. செழியன் திருவிடைமருதூர் உயர்கல்வித் துறை அமைச்சர்
  • தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி
  • மின்னணுவியல்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
திமுக
34. மா. மதிவேந்தன் இராசிபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சா்
  • ஆதிதிராவிடர் நலன்
  • மலைவாழ் பழங்குடியினர்கள்
  • கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
திமுக
35. என். கயல்விழி செல்வராஜ் தாராபுரம் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர்
  • மனிதவள மேம்பாட்டுத்துறை
  • முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை
திமுக

அமைச்சரவை மாற்றங்கள்

தொகு

அமைச்சரவையில் புதியவரைச் சேர்த்தலும், 11 அமைச்சர்களின் துறை மாற்றங்களும்

தொகு

14 டிசம்பர் 2022 அன்று உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சராக பதவியேற்றார்.[2]அன்றே 11 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டது.[3]

1. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு.

2. அமைச்சர் இ.பெரியசாமி - கூட்டுறவுத்துறையில் இருந்து ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. அமைச்சர் சு.முத்துசாமி - கூடுதலாக நகர்ப்பகுதி வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

4. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து கூட்டுறவுத்துறைக்கு மாற்றம்.

5. அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - கூடுதலாகக் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஒதுக்கீடு.

6. அமைச்சர் கா.இராமச்சந்திரன் - வனத்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றம்.

7. அமைச்சர் ஆர்.காந்தி - கூடுதலாக பூதானம் மற்றும் கிராம தானம் துறை ஒதுக்கீடு.

8. அமைச்சர் பி.கே. சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையுடன் சேர்த்து கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு.

9. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் துறையுடன் கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கீடு.

10. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கீடு.

11. அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் - சுற்றுலாத் துறையிலிருந்து வனத்துறைக்கு மாற்றம்.

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பும், அமைச்சரவையில் மாற்றங்களும்

தொகு

29 செப்டம்பர் 2024 அன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.[4] கோவி. செழியன் , பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சா்களாக பதவியேற்றனர். அன்றே 5 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

செந்தில்பாலாஜி

தொகு

வே. செந்தில்பாலாஜியை ஒரு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் 14 சூன் 2023 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வசமிருந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றபட்டு அவர் துறை இலாத அமைச்சராக இருந்தார். இருப்பினும் பலநாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நேரிட்டதால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் 26 செப்டம்பர் 2024 அன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.[5] 29 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[6]

க. பொன்முடி

தொகு

வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் க. பொன்முடிக்கு 21 திசம்பர் 2023 அன்று பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்ததைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை இழந்தார். அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் 22 மார்ச்சு 2022 இல் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரானார். 29.09.2024 அன்று நடைபெற்ற தமிழ்க அமைச்சரவை மாற்றத்தில் இவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.[7] [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Vigneshkumar (2022-03-29). "முதல்வர் துபாயிலிருந்து வந்ததுமே அதிரடி.. திமுக அரசு அமைந்த பிறகு நடந்த முதல் அமைச்சரவை மாற்றம்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
  2. அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்
  3. 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
  4. https://tamil.oneindia.com/news/chennai/how-the-post-of-deputy-cm-emerged-and-what-are-the-powers-amid-udhayanidhi-stalin-announcement-642419.html
  5. https://www.facebook.com/polimernews/videos/breaking-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/1173057150463193/
  6. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/deputy-chief-minister-udayanidhi--tamil-nadu-cabinet-changed/3743212
  7. https://www.dinakaran.com/tamilnaducabinet_hange_deputychief_inister_udayanidhi_inauguration_ceremony_evening/
  8. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/ponmudi-became-a-minister-again--/3582357
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அமைச்சரவை&oldid=4101407" இலிருந்து மீள்விக்கப்பட்டது