எ. வ. வேலு

இந்திய அரசியல்வாதி

எத்திராஜுலு வஜ்ரவேல் எனப்படும் எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951)[1] ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார்.

எ. வ. வேலு
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
உணவுத்துறை அமைச்சர் அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 மே 2006 –  15 மே 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 15, 1951 (1951-03-15) (அகவை 73)
சே. கூடலூர், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, தமிழ்நாடுஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்ஜீவா வேலு
பிள்ளைகள்எ. வ. வே. கம்பன்
எ. வ. வே. குமரன்
வாழிடம்(s)ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பிறப்பு

தொகு

ஆரம்ப காலம் மற்றும் அரசியல் பயணம்

தொகு
  • இவர் தனது ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும், அவரது திருவண்ணாமலை எம். ஜி. ஆர் திமுக ரசிகர் மன்ற உறுப்பினராகவும், தொண்டராகவும் இருந்து வந்தார்.
  • அதே கட்டத்திலே பம்பு செட் (Water Motor) பழுது பார்க்கும் பணி செய்து வந்தார்.
  • இந்த சூழலில் தான் தனது வருமானத்தையும், சம அந்தஸ்தை பெரிதாக்கி கொள்ளும் விதமாக தண்டராம்பட்டு தாலுக்காவில் பிரபலமாக இருந்து வந்த தாமோதரன் பேருந்து நிறுவனத்தில் நடத்துனர் (Bus Conductor) வேலையில் சேர்ந்தார்.
  • அத்துடன் கூத்துக்கலையில் நாட்டமுடைய இவர் அரசியலுடன் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டு திலகம், பட்டத்து ராணி படத்தில் நகைச்சுவை நடிகை கோவை சரளாவின் இணையாக நடித்தார்.[2]
  • பின்பு அரசியல் ஈடுபட்டுடுடன் தனது ஆதர்ச நாயகன் எம். ஜி. ஆர் முதல்வராக இருந்த போது அதிமுகவில் இணைத்து கொண்டு இவர் அன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் முதன்மை தலைவர்களில் ஒருவரான அன்றைய அமைச்சருமான பாவூர் சண்முகம் அவர்களின் உதவியாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
  • அந்த அக்காலகட்டத்திலே தனது ஆதர்ச நாயகன் முதல்வர் எம்.ஜி.ஆரிடமே நேரடியாக பழகும் வாய்ப்பை பெற்ற இவர் 1984 சட்டமன்றத் தேர்தலில் தனது தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
  • பின்னர் எம். ஜி. ஆர் மறைவிற்குப் பிறகு அவரது தீவிர ரசிகனான நடிகர் கே. பாக்கியராஜ் உடன் இணைந்து எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த போது திரு. ஏ. வ. வேலுவின் பங்கு அதில் அதிகமாகவே இருந்தது.
  • பின்பு 1990களில் தேர்தலை சந்திக்காமலே நடிகர் கே. பாக்கியராஜ் கட்சியை கலைத்துவிடவே ஏ. வ. வேலு அவர்கள் திமுகவில் 1995 ஆம் ஆண்டில் இருந்து இணைத்து கொண்டு தற்போது வரை செயல்பட்டுவருகிறார்.
  • அதன் பிறகு திமுக சார்பில் தண்டராம்பட்டு தொகுதியில் 2001, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார்.
  • பின்னர் திருவண்ணாமலை தொகுதிக்கு மாறி 2011, 2016, 2021 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வென்றார்.
  • மேலும் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான 2006–2011 திமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.
  • அதன் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் திமுக அமைச்சரவையில் 2021 மே 7 அன்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
  • அந்த பொதுப்பணித்துறை அதிகாரத்தின் கீழ்வரும் (நெடுஞ்சாலைத் துறை, கட்டிடங்கள், துறைமுகங்கள், தரிசு நில மேம்பாடு மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு) அமைச்சராக தற்போது செயலாற்றி வருகிறார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "எ .வ .வேலு". www.tn.gov.in
  2. 2.0 2.1 2.2 (Minister EV Velu | சினிமா ஆசை கண்டக்டர் Jayalalithaa -வை தவிக்க வைத்த கதை! | DMK | Mr Minister)
  3. கண்டக்டர் டூ மினிஸ்டர்... யார் இந்த எ.வ.வேலு? திமுகவின் மாஸ்டர் மைண்ட் தலைவரானது எப்படி?
  4. திமுக வேட்பாளர் சுயவிவரம்
  5. "களைகட்டும் தேர்தல் பந்தயம்!". தினமலர் நாளிதழ் (மே 01, 2021).
  6. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._வ._வேலு&oldid=4087212" இலிருந்து மீள்விக்கப்பட்டது