நாயக்கர்

(நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் காணப்படுகிறார்கள். [1]. நாயக்கர்கள் காப்பு, கொல்லா, கம்மா[2] எனப்படும் இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

நாயக்கர் / நாயுடு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து

இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் வாழுகிறார்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு, ராஜகம்பள கொல்லா, பலிஜா, கவரா, கம்மா[3], தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவர், முத்தரையர், துளுவ வெள்ளாளர்களில் சிலர் அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.

நாயக்கர்கள் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.

சொல்லிலக்கணம்

  • நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
  • நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
  • நாயக்கர் = நாயர் (மலையாளம்)
  • நாயக்கர் = நாயகே (சிங்களம்)
  • நாயக்கர் = நாயக் (மராத்தி)
  • நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

மக்கள் தொகை

ஆந்திராவில் நாயுடு இனத்தவர்கள் பெரும்பான்மை மிக்கவர்கள். கருநாடகம், கேரளம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள்.

பிரிவுகள்

நாயுடு/நாயக்கர் பட்டம் பயன்படுத்தும் பிரிவுகள்

  1. காப்பு
  2. கொல்லா
  3. கவரா
  4. பலிஜா
  5. பனாஜிகா
  6. தொட்டிய நாயக்கர்[சான்று தேவை]
  7. முத்துராஜா நாயுடு
  8. வெலமா
  9. கம்மா
காப்பு

ஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர்.

பலிஜா

பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல் நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து)[4] ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை];

கொல்லா

கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராஜகம்பள நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார்கள் (கொல்லா+வாரு=கொல்லவாரு) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள். உதாரணம் கம்மா+வாரு=கம்மவார்.

வெலமா

தமிழ்நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.

முத்துராஜா நாயுடு[5][6][7][8]

முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu)[9] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இச் சமூகத்தினர் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[10]

தொட்டிய நாயக்கர்

தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். தாங்கள் கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.[சான்று தேவை]இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.

இவர்கள் கொல்லாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை] இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர். இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டதே. விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்க்கை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[11]

தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:

தெலுங்கு பேசுவோர் :

  1. கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
  2. சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர்
  3. தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு (வால்) பிடித்து சென்றவர்கள் .
  4. பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
  5. வேகிளியார் (சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம்) - சுத்தமானவர்கள் என்று பொருள், மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
  6. வல்லக்கவார் (ஏற கொல்லா) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால், சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.[சான்று தேவை]
கன்னடம் பேசுவோர்
  1. காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.[சான்று தேவை]
  2. அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர மரபினர்.[சான்று தேவை]
  3. குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயநகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.

இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .

தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.

ஆந்திராவில் கொல்லா என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர் (குடியான சாதி) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும், ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.[சான்று தேவை]

கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.[சான்று தேவை]

குல தெய்வம்

பலிஜா

ரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .

கவரா

அழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .[சான்று தேவை]

ராஜ கம்பளத்தார்

ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .

பலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

கம்மவார் நாயக்கர்

கம்மவார், நாயுடு, சவுதாரி, நாயக்கர் என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், தேனி,கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர். தெலுங்கு மொழியைத் தாய் மொழியாக கொண்ட இவர்கள் குருமி என்ற இனத்தில் இருந்து வந்ததாக கருதப்படுகிறார்கள். பாலநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் மேலும் காகதிய, விஜயநகர மன்னர்கள் நாயக்கர் காலத்திலும் படை வீரர்களாக இருந்து வந்துள்ளனர். காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும், கம்மகாப்பு என்ற இனம் ஆந்திரா பகுதியில் இன்றும் உள்ளது. மற்றும் இவர்கள் தோற்றத்தை ஆராய்ந்த J.H. Nelson தனது THE MADURA COUNTRY A MANUAL நூலில் இவர்களை தொட்டிய நாயக்கர்களின் கிளை சாதி என குறிப்பிட்டுள்ளார்[12]. தமிழகத்தின் இளையரசனேந்தல், நெய்க்காரப்பட்டி ஆகிய ஜமீன்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஆந்திரா மக்கள் தொகையில் 5% கொண்ட இவர்கள் அரசியலிலும், பொருளாதாரம், கல்வியிலும் முன்னேறிய மக்களாக உள்ளனர். பல கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன.

விஜயநகர ராஜ கம்பளத்தார் மற்றும் முக்குலத்து தேவர்கள் கூட்டணி

பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாட்டிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த "வாசாப்" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாற்றைச் சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர். இதில் பல சகோதர சண்டைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதறிப்போனார்கள். அப்போதுதான் விஜயநகரப் பேரரசு தமிழகத்திற்கு வருகிறது. அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு தேவர்கள் ராஜகம்பளத்தார் இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள். பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்கப்பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர். பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெரும்பான்மை பாளையங்கள் ஒன்று கூடினர். புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார். நாயக்கர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைத்தளபதிகளாக இருந்தார்கள். உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளையத் தேவர். கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம்,[13]

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்[16]

காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்

கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :

  • திருமலை நாயக்கர் மகால் - திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தமிழகத்தில் காணக்கிடைக்கும் ஒரே கோட்டை.
  • திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
  • நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
  • திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
  • வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
  • உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
  • சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

குறிப்பிடத்தக்க நபர்கள்

வரலாறு

கொல்லா (ராஜகம்பளம்) இனம்

கவரா இனம்

கம்மா இனம்

  • முன்சுன்றி காபநெடு
  • பெம்மசாணி திம்மா நாயுடு
  • ராமலிங்க நாயுடு

அரசியல்

கம்மா இனம்

கலை

நடிப்பு

காப்பு இனம்

கம்மா இனம்

  • .என். டி .ராமராவ்
  • நாகேஸ்வர ராவ்
  • சோபன் பாபு
  • ஜூனியர் என்.டி.ஆர்
  • சிறீக்காந்த்

இயக்குனர்கள்

  • பவன் கல்யாண்
  • கோடி ராம கிருஷ்ணன்
  • தாசரி நாராயண ராவ் - புகழ்பெற்ற இயக்குனர்
  • ம.ராஜா

இசை அமைப்பாளர்கள்

  • தேவி சிறீபிரசாத்
  • ரமேஷ் நாயுடு

பாடகர்கள்

  • ஜிக்கி
  • சாந்தா குமாரி

தொழில் நுட்பாளர்

  • தோட்டா தாரணி
  • மார்தான்ட் கே. வெங்கடேஷ்

நடனம்

  • சோபா நாயுடு

தொழில் அதிபர்கள்

  • ஸ்ரீனி கோபுலு - நிருவாக இயக்குனர் மைக்ரோசாஃப்ட் இந்தியா
  • அல்லு அரவிந்த் -சினிமா தயாரிப்பாளர்
  • பாரதி மைசூர்

எழுத்தாளர்கள்

  • தோட்டா பிரசாத்
  • ஏ. எம். ரத்னம்

விளையாட்டு

  • சி.கே.நாயுடு - முதல் தலைவர் கிரிக்கெட்
  • புச்சி பாபு நாயுடு - இந்திய கிரிக்கெட்டின் தந்தை
  • கோட்டா ராமசாமி - கிரிக்கெட் , டென்னிசு
  • சி.எஸ்.நாயுடு - கிரிக்கெட்
  • அம்பட்டி ராயுடு - கிரிக்கெட்

மேலும் படிக்க

  1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
  2. கண்டி நாயக்கர்
  3. ராஜகம்பளம்
  4. பலிஜா
  5. போயர்
  6. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
  7. பனாஜிகா
  8. முத்துராச்சா
  9. வலஞ்சியர் சமூகம்

மேற்கோள்கள்

  1. "APonline - History and Culture-History". 2012-07-16 இம் மூலத்தில் இருந்து 2012-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120716182646/http://www.aponline.gov.in/quick%20links/hist-cult/history.html. 
  2. "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". https://en.m.wikisource.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India/Naidu. 
  3. "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". https://en.m.wikisource.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India/Naidu. 
  4. http://princelystatesofindia.com/Polegars/polegars.html
  5. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, தொகுப்பாசிரியர் (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780803996397. https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&dq=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra&focus=searchwithinvolume&q=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra. "The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house" 
  6. Eveline Masilamani-Meyer , தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas." 
  7. K. M. Venkataramaiah, தொகுப்பாசிரியர் (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. பக். 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185692203. https://books.google.co.in/books?id=2pAMAQAAMAAJ&dq=Muthuracha%3A+A+Telugu+caste&focus=searchwithinvolume&q=Muthuracha. "Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh" 
  8. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&dq=In+Tamil+Nadu%2C+they+are+more+numerous+in+Tiruchirappalli&focus=searchwithinvolume&q=%2C+++++andhra+Pradesh+frontiers++honoured++paligar++vijayanagar++more+numerous+++Tiruchirappalli. "Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere" 
  9. ந. சி கந்தையா பிள்ளை, தொகுப்பாசிரியர். சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். பக். 156. https://books.google.co.in/books?id=7BduAAAAMAAJ&q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjrzI794qPqAhXH4zgGHViLAE0Q6AEIKDAA. "முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்" 
  10. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
  11. [1]
  12. "The Madura Country A Manual". https://archive.org/stream/in.ernet.dli.2015.172487/2015.172487.The-Madura-Country-A--Manual-I-To-V_djvu.txt. 
  13. https://books.google.ca/books?id=RH4VPgB__GQC&pg=PA76&lpg=PA76&dq=marco+polo+sundara+pandian+thevar+a+christianity+in+india&source=bl&ots=eBdb62sZ_C&sig=-wNy3UdLPa_8-_k0WdaSXG74aV8&hl=en&sa=X&ved=0CBwQ6AEwAGoVChMIo8TjjNjryAIVAVweCh3ThgG2#v=onepage&q=marco%20polo%20sundara%20pandian%20thevar%20a%20christianity%20in%20india&f=false
  14. N.K., Singh. "Coronation of Shiva: Rediscovering Masrur Temple". https://books.google.co.in/books?id=pR5p2ZLQU8AC&pg=PP51&dq=viswanatha+nayak+built+meenakshi+temple&hl=en&sa=X&ved=2ahUKEwjOrdTn7-3rAhWEj-YKHd4ACOgQ6AEwBHoECAEQAQ#v=onepage&q=viswanatha%20nayak%20built%20meenakshi%20temple&f=false. 
  15. "மதுரை மீனாட்சி அம்மன் கோவில்". https://www.hindutamil.in/amp/news/others/121663-14.html. 
  16. "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்". https://tiruvannamalai.nic.in/ta/tourist-place/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/. 
  1. Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.
  2. Balijakula Charithra, by Kante Narayana Desayi
  3. Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயக்கர்&oldid=3674737" இருந்து மீள்விக்கப்பட்டது